லட்சத்தீவில் புதிய சட்டங்களைக் கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம்- வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறினர்!
கரவெட்டி: லட்சத்தீவில் புதிய சட்டங்களைக் கண்டித்து இன்று கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் இணைந்து 12 மணிநேர முழு அடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக புதிய சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை பிடித்தபடி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அத்துடன் லட்சத் தீவுகளில் இருந்து கேரளா, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் மொத்தமாக வெளியேறி உள்ளனர்.
லட்சத்தீவுகளுக்கான மத்திய அரசின் நிர்வாக அதிகாரியாக பாரதிய ஜனதா கட்சியின் பிரஃபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். அவர் இந்த பொறுப்பை ஏற்ற பின்னர் லட்சத்தீவில் பல்வேறு புதிய சட்டங்கள் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டன.

கடும் நெருக்கடிகள்
லட்சத்தீவு மக்களின் கடலோர குடியிருப்புகளை ஒழுங்குபடுத்துதல், மாட்டிறைச்சிக்கு தடை, மதுபான பார்கள் திறப்பு என புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகள் தாங்கள் இத்தனை நாளாக வாழ்ந்து வரும் வாழ்வியலையே தலைகீழாக மாற்றுகிறது; தங்களது கலாசாரத்தையே மாற்றி அமைக்க முயற்சிக்கின்றனர் என்பது லட்சத்தீவு மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.

வீடுகள் முன்பாக உண்ணாவிரதம்
லட்சத்தீவில் உள்ள பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இந்த புதிய சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் ஒவ்வொருநாளும் புதிய புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படுவது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இத்தகைய ஒடுக்குமுறைகளைக் கண்டித்து லட்சத்தீவில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை 12 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பாக லட்சத்தீவுகளை காப்பாற்றுங்கள் என்ற பதாகைகளை ஏந்தியபடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

லட்சத்தீவில் கொந்தளிப்பு
லட்சத்தீவின் பல பகுதிகளில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் லட்சத்தீவில் பெரும் கொந்தளிப்பான நிலைமை உள்ளது.

வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
இதனிடையே கரவெட்டியில் இருந்து படகுகள், கப்பல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையிலான வெளிமாநில தொழிலாளர்கள் லட்சத்தீவுகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெளியேறிவிட்டனர். பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான வழிகாட்டுதல்களிலும் புதிய நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் புதிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த தொழிலாளர்கள் மீண்டும் லட்சத்தீவுகள் திரும்புவார்களா? என்பதும் கேள்விக்குறி என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications