இறந்த தந்தையின் "உத்தரவின் பேரில்" புராரி தற்கொலையை நடத்திய மகன்... திடுக் தகவல்
இறந்த தந்தையின் உத்தரவின் பேரில் புராரி தற்கொலையை மகன் லலித் பாட்டியா நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.
Recommended Video

டெல்லி: இறந்த தந்தையின் உத்தரவின் பேரில் புராரி தற்கொலையை மகன் லலித் பாட்டியா நடத்தியாக கூறப்படுகிறது.
டெல்லியில் புராரி பகுதியில் 11 பேர் கொத்தாக தற்கொலை செய்து கொண்டிருந்தனர். இது கொலையாக இருக்கலாம் என்றிருந்த போலீஸார் தற்போது தற்கொலை என ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.
வீட்டிலிருந்து கிடைக்கப் பெற்ற அமானுஷ்ய குறிப்புகள் மூலம் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து இந்த தற்கொலைக்கு காரணம் இறைவனை பார்ப்பது என்ற மூடநம்பிக்கைதான் என்று போலீஸார் கருதுகின்றனர்.

தந்தை குரல்
இந்த தற்கொலை சம்பவத்தில் பெரும் பங்கு நாராயணனின் மகன் லலித் பாட்டியாவுக்கு உண்டு. அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையை போல் நடந்து கொண்டதாக தெரிகிறது. சில நேரங்களில் தந்தையின் குரலிலும் அவர் பேசுவாராம்.

அதீத நம்பிக்கை
தந்தைதான் தற்போது குடும்பத்தை வழி நடத்தி வருகிறார் என்ற எண்ணம் லலித்துக்கு உண்டு. இதனால் நாம் தற்கொலை செய்து கொண்டாலும் தந்தை காப்பாற்றுவார் என்று அதீத நம்பிக்கையும் இவருக்கு இருந்திருக்கிறது.

உண்ண வேண்டும்
இவர் தந்தை போலவே செயல்படுவதால் மற்ற உறுப்பினர்களும் இதையே நம்பியுள்ளனர். இதையடுத்து இறப்பதற்கு முன்பு 20 சப்பாத்திகளை வாங்கியுள்ளனர். அதற்கு தொட்டு கொள்ள எதையும் வாங்கவில்லை. அந்த சப்பாத்திகளை தாய் நாராயண் கைகளால் அனைவரும் உண்ண வேண்டும் என்று குறிப்பில் இருந்துள்ளது.

மாற்றம் இல்லை
இந்த சப்பாத்திகளை டெலிவரி செய்த பையனிடமும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. டெலிவரி செய்யும் போது அந்த குடும்பத்தினரிடம் எந்தவித மாற்றமும் தெரியவில்லை என்று போலீஸாரிடம் கூறியுள்ளார்.

தந்தை காப்பாற்றுவார்
இதையடுத்து தற்கொலை செய்வதற்கு முன்னர் லலித் எழுதிய குறிப்புகள் கிடைத்துள்ளன. அதில் தற்கொலை செய்துகொண்டால் தந்தை காப்பாற்றுவார் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் கடைசி நேரத்தில் உங்கள் கடைசி ஆசையை சொல்லும்போது மேகங்களில் வெடிப்பு ஏற்படும், பூமி நகரும் என அனைவரும் சப்தமாக கத்தினால் நான் வருவேன் , வந்து உங்களை காப்பேன் என்று தந்தை சொல்வதை போல் லலித் எழுதியிருந்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications