லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா, வசுந்தரா பதவி விலகத் தேவையில்லை: பாஜக உறுதி
டெல்லி: ஊழல் - முறைகேடு புகார்களில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு பிரிட்டன் விசா கிடைக்க பெரும் உதவி செய்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் பதவி விலகவில்லையென்றால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை செயல்பட விடமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ள நிலையில், பாஜக தன் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

ஊழல், மோசடி, முறைகேடு என பல்வேறு பிரிவுகளில் லலித் மோடி மீது இந்தியாவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக பிரிட்டனில் லலித் மோடி தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டில் மருத்துவ சிகிச்சை பெறும் மனைவியைக் காண்பதற்கு லலித் மோடிக்கு பிரிட்டன் அரசு விசா வழங்கியது. இதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியுள்ளார். அவருக்கும் முன்பே, லலித் மோடி பிரிட்டனில் குடியேற ஆதரவு தெரிவித்து வசுந்தரா ராஜே கடிதம் அனுப்பியுள்ளார். இந்த உண்மைகள் அம்பலமாகியுள்ளதால், சம்பந்தப்பட்ட தலைவர்கள் மற்றும் பாஜகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சுஷ்மா ஸ்வராஜும், வசுந்தரா ராஜேவும் பதவி விலக வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக, சுஷ்மா ஸ்வராஜும், வசுந்தரா ராஜேவும் பதவி விலகவில்லை என்றால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை செயல்பட விடமாட்டோம் என்று, மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.
பிரதமர் மோடி ஆலோசனை
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பாஜக தலைவர் அமித் ஷாவும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வியாழக்கிழமை தனித் தனியே சந்தித்துப் பேசினார்கள்.
இதன் பிறகு பாஜக வெளியிட்ட அறிவிப்பில், லலித் மோடிக்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரத்தில், சுஷ்மா ஸ்வராஜும், வசுந்தரா ராஜேவும் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்தது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுதான்சு திரிவேதி கூறுகையில், 'சுஷ்மா ஸ்வராஜும், வசுந்தரா ராஜேவும் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த அடிப்படையும் இல்லை,' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications