For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்

By BBC News தமிழ்
|

பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவை கால்நடைத் தீவன வழக்குடன் தொடர்புடைய டும்கா கருவூல வழக்கில் பிணையில் விடுதைல செய்ய உத்தரவிட்டிருக்கிறது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்.

லாலு பிரசாத் 3.13 கோடி ரூபாயை அதிகப்படியாக டும்கா கருவூலத்தில் இருந்து பணம் எடுத்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதை டும்கா கருவூல வழக்கு என கூறுகிறார்கள். அவ்வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு தற்போது பிணை வழங்கப்பட்டு இருக்கிறது.

Lalu Prasad Yadav gets bail

தற்போது லாலு பிரசாத் சிறையில் இருந்து வெளி வருவதற்கு எந்த தடையும் இல்லை. இந்த கால் நடை தீவன ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது பல வழக்குகள் போடப்பட்டிருந்தன. அதில் நான்கு வழக்குகளில், லாலு பிரசாத் குற்றவாளி என நீதிமன்றம் தீர்பளித்தது.

அந்த நான்கு வழக்குகளில், மூன்று வழக்குகளுக்கு முன்பே லாலு பிரசாத் ஜாமீன் பெற்று விட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

தண்டனை காலத்தில் பாதியைக் கழித்துவிட்டார் என்று தான் லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 19 பிப்ரவரி 2021-ல் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்த போது, பாதி தண்டனைக் காலம் முடிய இன்னும் சுமார் 1 மாதம் 17 நாட்கள் இருக்கிறது எனக் கூறி, நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்தை நிறைவு செய்த பின், ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து, லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம், லாலு பிரசாத்தின் நுரையீரல் தொற்று தீவிரமாக இருந்ததால், அவரை டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது வரை அங்கேயே தான் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன் ராஞ்சியில் இருக்கும் ராஜேந்திரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் (ரிம்ஸ்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த நான்கு தசாப்தங்களில் லாலு பிரசாத் யாதவ் ஒரு தேர்தல் பிரசாரத்தைக் கூட தவறவிட்டதில்லை. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில், லாலு பிரசாத் சிறையில் இருந்ததால் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Jharkhand HC gives bail for Lalu Prasad Yadhav.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X