லாலு பிரசாத் யாதவின் சகோதரி மரணம்.. பரோல் கேட்கிறாரா?
லாலு பிரசாத் யாதவின் சகோதரி உடல்நல குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார்.
ராஞ்சி: லாலு பிரசாத் யாதவின் சகோதரி உடல்நல குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார். லாலு இதன் காரணமாக பரோல் கேட்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
லாலு பிரசாத் மீதான மாட்டுத் தீவன ஊழல் வழக்கு கடந்த 21 வருடங்களாக நடந்து வந்தது. 1990-ம் ஆண்டு ஆரம்பித்த வழக்கு விசாரணை கடந்த வருடம்தான் முடிந்தது.

இந்த நிலையில் டிசம்பர் இறுதி வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு விவரம் கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் மூன்று முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு கடந்த 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் 5 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்தது.
இந்த நிலையில் லாலு பிரசாத்தின் ஒரே சகோதரியான கங்கோத்ரி தேவி இன்று அதிகாலை மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக இவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக லாலு பரோல் கேட்பார் என கூறப்படுகிறது. கங்கோத்ரி தேவி லாலுவை விட 4 வயது மூத்தவர் ஆவார்.
லாலு வழக்கில் தண்டனை பெற்றதால் இவர் மனம் உடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் வழக்கு தீர்ப்பு அன்று இவர் பிராத்தனை செய்ததாகவும் கூறப்பட்டு இருக்கிறது. லாலு இதனால் இன்று அவரின் சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications