கொசு, மூட்டைப்பூச்சி கடிகளோடு கழிந்த 'கைதி எண் 3312' லல்லுவின் முதல்நாள் சிறை வாழ்க்கை
ராஞ்சி: கால்நடை தீவன ஊழலில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப் பட்ட பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லல்லுபிரசாத் யாதவ் தனது முதல் நாள் சிறை வாழ்க்கையில் கொசுக்கடி மற்றும் மூட்டைப்பூச்சிக் கடியால் மிகவும் அவதிப்பட்டாராம்.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று முந்தினம் தீர்ப்பளித்தது. இதையடுத்து லாலு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரான லாலுவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். அதேபோல், சிறையிலும் தனக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வேண்டும் என்ற லல்லுவின் வேண்டுகோள் நிராகரிக்கப் பட்டது.
இந்நிலையில், சிறையில் கொசுக்கடி மற்றும் மூட்டைப்பூச்சிக்கடிகளோடு தனது முதல்நாள் பொழுதை லல்லு கழித்ததாக தெரிய வந்துள்ளது.

அதிகாலை உறக்கம்....
முதல்நாள் இரவு முழுவதும் மூட்டைபூச்சி மற்றும் கொசுக்கடி தொல்லையால் தூங்க முடியாமல் அவதிப்பட்ட லல்லு, அதிகாலை வேளையில் கண்ணயர்ந்தாராம்.

சிறையில் ஒரு உலா....
சரியாக காலை 7 மணியளவில் கண் விழித்த அவர் சிறை வளாகத்தினுள் ஒருமுறை சுற்றி வந்துள்ளார்.

இந்தக் கொசுத்தொல்லை தாங்கலப்பா...
கொசு தொல்லை மற்றும் மூட்டைபூச்சி கடி பற்றி சிறை அதிகாரியிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

தேநீர் வித் செய்தித்தாள்....
பின்னர், செய்தி தாள்களை சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்த லல்லு, டி.வி. செய்திகளையும் பார்த்துவிட்டு தேநீர் குடித்துள்ளார்.

கைதி எண் 3312....
சிறையில் அவருக்கு 3312 என்ற கைதி எண் வழங்கப் பட்டுள்ளது. சிறையின் உணவு பட்டியலின்படி வி.ஐ.பி. கைதிகளுக்கு அன்றாடம் 350 கிராம் அரிசி, 117 கிராம் பருப்பு, 233 கிராம் உருளைக் கிழங்கு, 233 கிராம் காய்கறிகள், 467 கிராம் தயிர் அல்லது பால், 29 கிராம் நெய் மற்றும் 2 பழங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications