அமீத் ஷாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது... லாலு பிரசாத் காட்டம்
பாட்னா: பாஜக தேசிய தலைவர் அமீத் ஷாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? என ராஷ்டிரிய ஜனதாள கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவ் கேட்டுள்ளார்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவினால் அதை பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். அந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது பீகார் வாக்காளர்களின் கடமையாகும் என்று பாஜக தலைவர் அமீத் ஷா நேற்று பீகார் மாநிலம் ரக்ஸால் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார்.

மேலும், பீகாரி்ல் இதுவரை நடைபெற்று வந்த காட்டாட்சி மீண்டும் வேண்டுமா? எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதாள கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவும் அமீத் ஷாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என கேட்டுள்ளார்.
மேலும், இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமீத் ஷாவின் இந்த பேச்சு 11 கோடி பீகார் மக்களையும் அவமானப்படுத்துவதாகும். இந்த பேச்சு பீகாரில் உள்ள இந்து, முஸ்லீம், தலீத், பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரையும் அவமதிக்கும் மனப்போக்கை காட்டுகிறது.
இது ஒன்றும் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி அல்ல. பா.ஜ.க ஒன்றும் இந்தியா அல்ல, பீகார் ஒன்றும் பாகிஸ்தான் அல்ல. அமீத் ஷாவின் பேச்சு மூலம் பீகார் மக்களை பெரிதும் காயப்படுத்தி விட்டார். அதற்கு பீகார் மக்கள் வாக்கு மூலம் கடுமையான பாடத்தை பா.ஜ.கவுக்கு புகட்டுவார்கள்.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் லாலுபிரசாத் நம்பிக்கையுடன் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications