விவசாயிகளின் நலனுக்காகவே நிலம் கையகப்படுத்தும் மசோதா: ரேடியோ உரையில் மோடி
டெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகள் மற்றும் கிராமத்தினரின் நலன் கருதி கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோடி மான் கி பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் என்ற பெயரில் நடத்தப்படும் ரேடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவ்வப்போது உரை நிகழ்த்துகிறார். இந்நிலையில் அவர் இன்று 30 நிமிடங்கள் நிகழ்த்திய ரேடியோ உரையில் விவசாயிகள் பற்றி பேசியுள்ளார்.
இன்றைய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

விவசாயிகள்
விவசாயிகள், அவர்களின் குழந்தைகள் மற்றும் கிராமத்தினரின் நலன் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். விவசாயிகள் நலன் கருதி தான் நிலம் கையகப்படுத்தும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

மசோதா
நிலம் கையகப்படுத்தும் மசோதா பற்றி பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அதை யாரும் நம்பிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உணவு
நாட்டுக்கே உணவு வழங்கும் விவசாயிகள் ஏழையாக உள்ளனர். அவர்களின் தயாரிப்புகளுக்கு ஏற்ற விலை கிடைப்பது இல்லை.

உரம்
கிராமப்புறங்களில் சரியான சாலை வசதிகள் இல்லாதது முக்கிய பிரச்சனை ஆகும். உரங்களின் விலை அதிகரித்து வருவது விவசாயிகளை கவலை அடைய வைத்துள்ளது.

பிரச்சனை
விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருகிறோம். கிராமங்கள் வலுவாக விவசாயிகள் வலுவானவர்களாக இருக்க வேண்டும்.

மாநில அரசு
நிலம் கையகப்படுத்தும் மசோதா பிடிக்கவில்லை என்றால் மாநில அரசுகள் பழைய சட்டத்தையே பின்பற்றலாம்.

ஏ.சி.
சில நேரங்களில் ஏ.சி. அறையில் அமர்ந்து சட்டம் எழுதுபவர்களுக்கு கிராமங்களில் நடப்பது தெரியாமல் போய்விடுகிறது.

ஏழை
விவசாயிகளை ஏழைகளாகவே வைக்கத் தான் நில மசோதா பற்றி பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதா 120 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது என்று மோடி தெரிவித்துள்ளார்.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications