ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சம்: லாலுவை தொடர்ந்து தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை 8 மணி நேரம் விசாரணை!
பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி நிறுவனருமான லாலு பிரசாத் யாதவிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது மகன், முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிடம் இன்று 8 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரயில்வே பணியிடங்களை வழங்க நிலம் லஞ்சமாக பெற்றார் என்பது வழக்கு. இதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக லாலு பிரசாத் யாதவ் நேற்று ஆஜரானார். பாட்னா அமலாக்கத்துறை அலுவலகத்தில் லாலு பிரசாத் யாதவிடம் சுமார் 10 மணி நேரம் தொடர்ச்சியாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று தேஜஸ்வி யாதவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தேஜஸ்வி யாதவிடம் சுமார் 8 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இந்த விசாரணைகள் தொடர்பாக ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா கூறுகையில், எதிர்க்கட்சிகளைக் கண்டு பாஜக மேலிடம் அச்சப்படுகிறது. மத்திய விசாரணை ஏஜென்சிகளை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது பாஜக. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறது பாஜக தலைமை என்றார்.
இதேபோல ஆர்ஜேடி மற்றொரு மூத்த தலைவர் சக்தி சிங் கூறுகையில், லாலு மீதான ஊழல் குற்றச்சாட்டு காலத்தில் தேஜஸ்வி யாதவ் மைனர் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் அவரை குறி வைத்து விசாரிக்கின்றனர் என்றார்.
ஆனால் பாஜக மூத்த தலைவரும் புதிய துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி, லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த போது மாட்டுத் தீவன ஊழலில் சிக்கினார். இதற்காக சிறை தண்டனை அனுபவித்தார். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வே பணிகளுக்கு நிலம் லஞ்சமாக பெற்றார். இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்துதான் ஆக வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications