இலங்கை அதிபர் சிறிசேன திருப்பதியில் சுவாமி தரிசனம்! பலத்த பாதுகாப்பு!!
திருமலை: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
4 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்த மைத்ரிபால சிறிசேன டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மனைவி உட்பட 24 பேர் குழுவுடன் பீகார் மாநிலம் புத்தகயாவுக்கு நேற்று சென்றார் சிறிசேன. அங்கு மகாபோதி ஆலயத்தில் புத்தருக்கு ஞானம் கிடைத்த போதி மரத்தின் கீழ் நின்றவாறு15 நிமிடம் சிறிசேன பிரார்த்தனை செய்தார்.

மகாபோதி ஆலயத்தில் 1 மணி நேரமாக பல்வேறு பிரார்த்தனைகளை மேற்கொண்ட அவர், பின்னர் அருகில் உள்ள இலங்கை மடத்துக்கு சென்றார். அங்கு மகாபோதி கோயில் நிர்வாகம் சார்பாக தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
இதையடுத்து கயா விமான நிலையத்துக்கு சென்ற சிறிசேன அங்கிருந்து சிறப்பு விமானம் மூலமாக திருப்பதி வந்தார். திருப்பதியில் இன்று காலை அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
சிறிசேனவின் வருகையையொட்டி திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதன் பின்னர் அவர் இலங்கை திரும்பினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications