மீண்டும் ஒரு புரட்சியை துவங்கியுள்ளோம்: மைசூர் இந்திய அறிவியல் மாநாட்டில் மோடி பேச்சு
மைசூர்: இந்தியாவில் மேம்பாடு மட்டும் வேலைவாய்ப்பை பெருக்க மீண்டும் ஒரு புரட்சியை துவங்கியுள்ளோம் என பிரதமர் மோடி இந்திய அறிவியல் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக மைசூர் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்திய அறிவியல் மாநாட்டை இன்று துவங்கி வைத்தார். மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டை துவங்கி வைத்த மோடி 15 ஆயிரம் விஞ்ஞானிகளுக்கு மத்தியில் உரையாற்றினார். பதன்கோட் சம்வத்தை அடுத்து மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
7ம் தேதி வரை நடக்க உள்ள மாநாட்டில் மோடி பேசுகையில்,

விஞ்ஞானிகள்
இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அறிவியல் தலைவர்கள் மத்தியில் இந்த ஆண்டை துவங்குவதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவின் பெரும் தலைவர்கள் மைசூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.

புரட்சி
இந்தியாவில் மேம்பாடு மட்டும் வேலைவாய்ப்பை பெருக்க மீண்டும் புதிய புரட்சியை துவங்கியுள்ளோம். மக்களின் லட்சியத்தை ஊக்குவித்துள்ள நாங்கள் அதற்கான முயற்சிகளையும் அதிகரிக்கிறோம்.

அறிவியல்
புதுமைகளை கண்டுபிடிப்பதே அறிவியலின் நோக்கமாக இருக்க வேண்டும். மக்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு விஞ்ஞானிகள் மற்றும் புதியவற்றை கண்டுபிடிப்பவர்களையே எதிர்பார்த்துள்ளோம்.

உணவு பாதுகாப்பு
உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளோம். உலகில் உள்ளவர்களுக்கு சிறப்பான வாழ்க்கைக்கான நம்பிக்கையை அளித்துள்ளோம். வெறும் கொள்கைகளும், முடிவு எடுப்பதும் நல்ல அரசு அல்ல. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதே நல்ல அரசு ஆகும். நல்ல அரசு அறிவியல் தொலைநோக்குடன் செயல்பட வேண்டும்.

ஆய்வு
புதுமையை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை துவங்குகிறோம். மத்திய, மாநில அறிவியல் மையங்கள் கூட்டாக செயல்படுவதை நான் ஊக்குவிக்கிறேன். இந்தியாவில் அறிவியல் ஆய்வு செய்வதை எளிமையாக்குவோம்.

புதுமை
பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட மட்டும் அல்ல பருவநிலை நீதி கிடைக்கவும் புது கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியம். நகரங்களை சிறந்த முறையில் வடிவமைக்க அறிவியல் தேவை.

கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது வாழ்க்கையில் சிறப்பான அறிவியல் சாதனைகளை செய்துள்ளார். மனிதர்கள் மீது அளவில்லாத அன்பு கொண்டவர். ஏழை, எளிய மக்கள் மற்றும் வாலிபர்களின் வாழ்க்கையை மாற்றுவது தான் அறிவியலின் முக்கிய நோக்கம் என்பார் கலாம். இந்த மாநாட்டின் நோக்கம் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் உள்ளது.

இந்தியா
எதையும் சார்ந்திராத இந்தியாவுக்காக மட்டும் நாம் பாடுபடக் கூடாது. மனித வளம், அறிவியல் திறன் மற்றும் துறை மேம்பாடு ஆகியவற்றின் பலத்தால் நிற்கும் இந்தியாவை காண விரும்ப வேண்டும்.

பொருளாதாரம்
பொருளாதாரம், சுற்றுச்சூழல், சக்தி, புரிந்துணர்வு, நேர்மை ஆகிய 5 கொள்கைகளை மனதில் வைத்து விஞ்ஞானிகள் பணியாற்றினால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும்.












Click it and Unblock the Notifications