மாநில சட்ட அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு.. குஜராத்தில் இன்று தொடக்கம்.. பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு இன்று நடக்கிறது
காந்திநகர்: அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று தொடங்குகிறது.. இன்றைய மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் 2 நாள் மாநாடு குஜராத்தில் நடைபெறுகிறது.
இதில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முக்கிய உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் இந்த முன்னெடுப்பு மூலம், இந்திய சட்டமுறை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன..

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில்,மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், புதிய யோசனைகளை சொல்வதற்கும், இதன் மூலம் மத்திய மாநில அரசுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்த மாநாடு வழிவகுக்கும் என்று பெரிதாக நம்பப்படுகிறது..
இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள மாநாட்டின் தொடக்கத்தில், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.. மத்திய மாநில அரசுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த மாநாடு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அக்டோபர் நேற்று தொடங்கி உள்ளது..
மாநாட்டின் 2வது நாளான இன்று, மின்சார உற்பத்தி நிறுவனங்களின் நம்பகத்தன்மை, திறன்மிகு கணக்கீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் சேமிப்பும், எரிசக்தித் துறை சீர்திருத்தங்கள், உரிய நேரத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக 24 மணி நேரமும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், மின்சார நுகர்வோரின் உரிமைகள், 2030-ஆம் ஆண்டில் எரிசக்தி அமைப்புமுறை, எரிசக்தி பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications