பள்ளி மாணவியை 14 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்: வழக்கறிஞர் கைது
உஜ்ஜையினி: பள்ளி மாணவியை கடத்தி 14 நாட்கள் உஜ்ஜையினி நகரில் 17 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று 14 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஜாதி சான்றிதழ் வாங்குவதற்கு உதவி கேட்டு, தனது வீட்டிலிருந்து 50 அடி தூரத்தில் உள்ள வீட்டில் வசிக்கும் 40 வயது நிரம்பிய வழக்கறிஞர் பாலகிருஷ்ண ஜோஷியை சந்தித்தார்.
அப்போது அம்மாணவியை சிறைபிடித்த வழக்கறிஞர் தொடர்ந்து 14 நாட்கள் அவரது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அம்மாணவியின் அழுகை குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வழக்கறிஞரை கைது செய்ததுடன் மாணவியையும் மீட்டனர்.
பெண்ணை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்த பெற்றோர், அவள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே அடைத்து வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காப்பாற்றப்பட்ட மாணவி தன்னை வழக்கறிஞர் சிறைபிடித்தபோது அவரது மனைவியும், மகனும் அவருக்கு உதவி செய்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications