Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிபிகல் தெலுங்கு ஸ்டைல்.. கன்னட படத்தை விட பெஸ்ட்... 'மைனிங்' ரெட்டி மகள் திருமண அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: நம் ஊரில் திருமணம் என்றால் அழைப்பிதழை அழகான காகிதத்தில் அச்சடித்து உறவினர்களை நேரில் சென்று அழைப்போம். கொஞ்சம் வசதி அதிகம் உள்ளவர்கள் வெள்ளித்தட்டில் அழைப்பிதழை அச்சடித்து கொடுப்பார்கள். கர்நாடக முன்னாள் அமைச்சரும் சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமண அழைப்பிதழ் எல்சிடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ திருமண அழைப்பிதழ் பற்றிதான் தற்போது பேச்சாக உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

திருமணத்திற்கு முன்னோட்டமாக கருதப்படுவது அழைப்பிதழ் மட்டுமே, திருமண வீட்டாரின் செல்வச் சிறப்பை சில நேரங்களில் இதன் மூலம் அறியலாம். நாம் பார்த்த வரைக்கும் ஆடம்பர அழைப்பிதழ் என்பது அதிக விலையிலானதாகவோ, அல்லது அழைப்பிதழுடன் சில மதிப்புமிக்க பொருட்களை வைத்து தருவது என இந்த வகையிலானவையாகவே இருந்து வருகிறது. ஆனால், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஒருவரது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழ் புது வகையாக உள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழில் அதிபருமான ஜனார்தனன் ரெட்டி தான் இந்த அழைப்பிதழை உருவாக்கியவர், இவரை தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தி கூற வேண்டுமெனில் ரெட்டி சகோதர்கள் என்றால் பிரசித்தம், ஆம் கர்நாடகாவின் ரெட்டி சகோதர்களில் ஒருவர் தான் இந்த ஜனார்தன் ரெட்டி.

சுரங்க தொழில் அதிபர் ரெட்டி

சுரங்க தொழில் அதிபர் ரெட்டி

சட்டவிரோத சுரங்கத் தொழில் செய்ததாக சிபிஐயால் கைதாகி, 3 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளிவந்தவர் தான் இந்த ஜனார்தனன் ரெட்டி.. இவரின் மற்ற 2 சகோதர்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி. கடந்த பாஜக ஆட்சி காலத்தில் கர்நாடகத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களே. இவர்கள் ஆந்திர அரசியலிலும், கர்நாடக அரசியலிலும் ஆதிக்க சக்தியாக விளங்கியவர்கள் ஆவார்கள்.

ரெட்டி மகளுக்கு திருமணம்

ரெட்டி மகளுக்கு திருமணம்

ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிரம்ஹானி. இவருக்கு வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. தனது மகளின் திருமணத்திற்கு பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ள ரெட்டி. அதன் ஒரு பகுதியாக திருமண அழைப்பிதழை இதுவரை யாரும் செய்யாத முயற்சியாக புதுமையான விதத்தில் வடிவமைக்கப்பட்டது.

அழைப்பிதழ் பெட்டி

அழைப்பிதழ் பெட்டி

திருமணத்திற்கு அழைக்க இவர் ஒரு அழைப்பிதழ் பெட்டியையே கொடுத்து வருகிறார். அப்பெட்டியை திறந்தவுடன் அதில் ஒரு எல்சிடி திரையில் ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக ஓடும் ஒரு வீடியோ தோன்றுகிறது, அதில் ஒரு பிரத்யேக பாட்டு ஒளிபரப்பாகிறது, அதில் ஜனார்த்தனரெட்டி, அவரின் மனைவி, மகன், மற்றும் மனப்பெண், மணமகன் ஆகியோர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கிறார்கள். திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள்.அந்த வீடியோவின் இடையே மணமகள்-மணமகனும் திரைப்பட டூயட் காட்சி போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடம்பர அழைப்பிதழ்

ஆடம்பர அழைப்பிதழ்

எல்.சி.டி திரையில் வீடியோ மூலம் திருமணத்திற்கு அழைப்பு விடுப்பது தொழில்நுட்பம் மற்றும் ஆடம்பரத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. அழைப்பிதழிலேயே இப்படியென்றால் திருமணத்தில் என்னென்ன பிரம்மாண்டங்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை... இது மட்டுமல்ல ஷாருக் கான், பிரபுதேவா, தமன்னா, கத்திரினா கைஃப், என நட்சத்திரப் பட்டாளமே ரெட்டி வீட்டு திருமணத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாம்.

ரெட்டியின் தனித்துவம்

ரெட்டியின் தனித்துவம்

காலையில் டிபன் சாப்பிடவே சுரங்கநிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு வருவாராம் ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணத்தையும் யாரும் செய்யாத விதத்தில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அழைப்பிதழிலேயே அதை நிரூபித்து விட்டார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+