மேற்கு வங்க தேர்தல்: மம்தாவை வீழ்த்த, காங்கிரஸ்-இடதுசாரிகள் நடுவே 'உடன்பாடு'
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்று இடதுசாரி கூட்டணி தலைவர் பீமன் போஸ் தெரிவித்தார். அதேநேரம், இது கூட்டணி கிடையாது என்றும், இரு கட்சியினரும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை 6 கட்டங்களாக 7 நாட்கள் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 116 தொகுதிகளுக்கான வேட்பார்கள் பட்டியலை இடதுசாரிகளின் கூட்டணித் தலைவர் பீமன்போஸ் கொல்கத்தாவில் வெளியிட்டார்.
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய பீமன் போஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடபோவதில்லை. அக்கட்சியோடு எங்களுக்கு கூட்டணியும் கிடையாது என்றார்.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் இடதுசாரி முன்னணி வேட்பாளர்களை நிறுத்தாமல், மறைமுகமாக அக்கட்சிக்கு ஆதரவு தரும் என்பதைத்தான், உடன்பாடு என்ற வார்த்தையால் பீமன் போஸ் குறிப்பிட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications