சசிகலா மீண்டு வர சட்ட ரீதியாக சான்ஸே இல்லை!
சட்டரீதியாக சசிகலா மீண்டு வர வாய்ப்பே இல்லை என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டு விட்ட சசிகலா அடுத்த 10 ஆண்டுகளுக்கு மீண்டு வரவே முடியாது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா அடுத்து ஆறு வருடங்களையும் சேர்த்து மொத்தம் 10 வருடம் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது.
கட்சிப் பதவியில் மட்டுமே இருக்க முடியும். மற்றபடி அவருக்கான சட்ட நிவாரணம் என்பது சுத்தமாக இல்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

சட்டரீதியாக வாய்ப்பில்லை
சட்ட ரீதியாக அவருக்கு வாய்ப்புகள் கிட்டத்தட்ட இல்லை என்றே கூற வேண்டும். ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது.

மறு பரீசலனை கோரலாம்
தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுங்கள் என்று கேட்கலாம். ஆனால் அதை உச்சநீதிமன்றம் பொதுவாக ஏற்க வாய்ப்பில்லை. அதாவது 10ல் 9 வழக்குகளில் மறு ஆய்வுக்கு இடமில்லை என்றுதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெஞ்ச் விரும்பாது
தனது சொந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய எந்த பெஞ்ச்சுமே விரும்பாது. எனவே மறு ஆய்வு என்பது கால விரையம்தான். மிக மிக முக்கியமான பிரச்சினைகளின்போது மட்டுமே மறு ஆய்வு குறித்த யோசனைக்கே நீதிபதிகள் போவார்கள்.

10 வருடம் காலி!
ஆனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அந்த வகைப்பாட்டுக்குள் வராதவர்கள் என்பதால் மறு ஆய்வுக்கான வாய்ப்பும் சுத்தமாக கிடையாது என்பதே நிதர்சனம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications