பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை: பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1944-களில் இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் திலீப் குமார். தற்போது 94 வயதான திலீப்குமார் மும்பை மேற்குபந்த்ரா பகுதியில் மனைவி சாய்ராபானுவுடன் வசித்து வந்தார்.

முதுமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.
நடிகர் திலீப் குமாருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேவதாஸ், மொகல் இ ஆசாம், கர்மா போன்ற படங்கள் திலீப் குமார் நடித்த ஹிட் படங்களாகும். முன்னணி நடிகராக திகழ்ந்த திலீப்குமார் சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.
திரையுலகில் சாதனை படைத்தமைக்காக பத்ம விருதுகள், தாதாசாஹிப் பால்கே போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். திலீப்குமார் தன்னைவிட 20 வயது இளையவரான சாய்ரா பானுவை 1966ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications