பெங்களூர் பள்ளியில் பிடிபட்ட சிறுத்தை கூண்டை விட்டு தப்பி ஓடியது... பீதியில் மக்கள்!
பெங்களூர்: பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள விப்ஜியார் பள்ளியில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தை பன்னர்கட்டா விலங்கியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பியோடியுள்ளது.
பெங்களூர் புறநநகர் பகுதியான ஒயிட்பீல்டு அருகே உள்ள மாரதஹள்ளியில் இருக்கும் விப்ஜியார் பள்ளிக்குள் கடந்த வாரம் சிறுத்தை ஒன்று புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் வந்து 12 மணிநேரம் போராடி சிறுத்தையை பிடித்தனர்.

சிறுத்தையை பிடிக்கையில் 3 பேர் காயம் அடைந்தனர். பள்ளியில் பிடிக்கப்பட்ட சிறுத்தை தெற்கு பெங்களூரில் உள்ள பன்னர்கட்டா விலங்கியல் பூங்காவில் விடப்பட்டது. பூங்காவில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுத்தை தற்போது தப்பியோடியுள்ளது.
உணவு அளிக்க கூண்டை திறந்தபோது அது தப்பியோடியுள்ளது. சிறுத்தை விலங்கியல் பூங்கா பகுதியில் தான் இருக்கும், அதனால் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய சிறுத்தைக்கு ஒரு கண்ணில் பார்வை பிரச்சனை உள்ளது. மேலும் பல் ஒன்றும் உடைந்துள்ளது. அந்த சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அதை பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications