உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக அறிவிப்பு... உ.பி. பேங்க்கில் நடந்த குழப்பம்!
உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக வங்கி அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் உயிரோடு இருக்கும் நபர் இறந்துவிட்டதாக வருவாய் துறையினர் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத்தைச் சேர்ந்தவர் தேவேந்திர குமார். இவர் கடந்த சனிக்கிழமை, தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், தேவேந்திர குமார் இறந்துவிட்டதாக வருவாய் துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தேவேந்திர குமார், தனது அடையாள அட்டை உள்ளிட்ட சான்றுகளை காண்பித்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த வங்கி ஊழியர்கள், போலீசில் புகார் செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என தேவேந்திர குமாரை மிரட்டியுள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த தேவேந்திர குமார் ஊடகங்களின் உதவியை நாடினார். இதுபற்றி செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட மாவட்ட ஆட்சியர் நேகா சர்மா, தேவேந்திர குமாரின் இறப்பு குறிப்பு பற்றி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் வருவாய் துறையினர் மீது எந்த தவறும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள மாவட்ட ஆட்சியர் நேகா சர்மா, வங்கி ஊழியர்கள் தான் தவறாக பதிவிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
“மேலும் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications