அழைத்த அமித் ஷா.. மறுத்த அத்வானி.. பெங்களூரு செயற்குழு கூட்டத்தில் சலசலப்பு!
பெங்களூரு: பாஜக செயற்குழு கூட்டத்தில் இரண்டாம் நாளான இன்று, அத்வானி உரையாற்ற மறுத்துவிட்டது சர்ச்சைக்குறிய விஷயமாகியுள்ளது.
பாஜக தொடங்கப்பட்ட 35 ஆண்டுகால வரலாற்றில், பெங்களூரு செயற்குழு உட்பட 2 செயற்குழுக்களில் மட்டுமே அத்வானி நிறைவுரை ஆற்றியது கிடையாது.

மோடி தலைமையிலான மத்திய அரசிலும், அமித்ஷாவின் பாஜகவிலும், அத்வானி ஓரம் கட்டப்பட்டுள்ளார். அமைச்சர் பதவி எதுவுமே அளிக்கப்படாத நிலையில், கட்சியின் நாடாளுமன்ற குழுவில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில்தான், பெங்களூருவில் பாஜக தேசிய செயற்குழு நேற்றுமுன்தினம் தொடங்கி, இன்றுடன் முடிகிறது. இந்த கூட்டத்தில், அத்வானி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர் வருகை தந்து மேடையிலும் அமர்ந்திருந்தார்.
அதேநேரம், அத்வானி நேற்றைய தொடக்க நாள் நிகழ்ச்சிகளில் மேடையில் எதுவுமே பேசவில்லை. இன்றைய கூட்டத்தின்போது அமித்ஷா பேச அழைத்தும், அத்வானி பேச மறுத்துவிட்டார்.
பாஜக கட்சி உருவாகிய 35 ஆண்டுகால வரலாற்றில், நெடுக பயணித்தவர் அத்வானி. இன்றுடன் சேர்த்து, மொத்தம் 2 முறை மட்டுமே அவர் தேசிய செயற்குழுவில் உரையாற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications