கிரிக்கெட் வாரியத்தை கதிகலங்க வைக்கப் போகும் லோதா குழு பரிந்துரைகள்- வெடிக்கும் புது பஞ்சாயத்து!!
டெல்லி: ஸ்பாட் பிக்சிங், பெட்டிங்கில் சிக்கிய ஐபிஎல் போட்டியை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர நீதிபதி லோதா குழு வரும் 4ம் தேதி இரண்டு முக்கிய சீர்திருத்தங்களை அறிவிக்க உள்ளது.
ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் நீதிபதி லோதா குழுவை நியமித்தது. இந்நிலையில் கிரிக்கெட்டை சீரமைக்கும் வகையில் நீதிபதி லோதா குழு வரும் 4ம் தேதி இரண்டு முக்கிய சீர்திருத்தங்களை அறிவிக்க உள்ளது.

மாநிலத்திற்கு ஒரு கிரிக்கெட் சங்கத்தை அமைக்க லோதா குழு பரிந்துரை செய்ய உள்ளது என்று கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்கீழ் உள்ள கிரிக்கெட் சங்கங்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த புதிய பரிந்துரையாம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று கிரிக்கெட் சங்கங்கள் உள்ளன. அதே போன்று குஜராத்திலும் மூன்று சங்கங்கள் உள்ளன. மேலும் ஆந்திராவில் 2 கிரிக்கெட் சங்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் மாநில சங்கங்களில் பொறுப்பு வகிக்க தடை விதிக்கவும் லோதா குழு பரிந்துரை செய்ய உள்ளது. லோதா குழுவின் இந்த பரிந்துரைகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவர் செய்த தவறுக்காக அனைவரையும் குறி வைப்பது சரியல்ல என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications