நவ. 7 தேர்தல்: சத்தீஸ்கரின் 20 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 16- 18; அப்ப பாஜகவுக்கு? கடைசி பரபர சர்வே
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 16 முதல் 18 தொகுதிகளைக் கைப்பற்றும் என்கிறது கடைசிநேர Lok Poll கருத்து கணிப்பு.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 90 தொகுதிகளில் முதல் கட்டமாக தெற்கு சத்தீஸ்கரின் 20 தொகுதிகளுக்கு மட்டும் நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 20 தொகுதிகள் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு உள்ள மாவட்டங்களில் அமைந்துள்ளன. இந்த 20 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

126 கிராமங்களில்.. : சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தலில் பழங்குடிகள் வாக்களிக்க 126 கிராமங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக இந்த பழங்குடி மக்கள் வாக்களிக்க உள்ள்னர். இப்பகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஹெலிகாப்டர் உள்ளிட்டவைகளுடன் கொண்டு செல்லப்பட்டன.
கருத்து கணிப்பு முடிவுகள்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் குறித்த பெரும்பாலான கருத்து கணிப்புகள், காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் என கூறுகின்றன. பாஜக, முந்தைய தேர்தலைவிட கணிசமான இடங்களைப் பெறக் கூடும் என்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையான 41 இடங்களை பாஜக பெற முடியாது என்கின்றன கருத்து கணிப்புகள்.
Providing our predictions for the 20 seats where polling is scheduled for the 7th November 2023.
— Lok Poll (@LokPoll) November 5, 2023
▪️INC 16 - 18
▪️BJP 3 - 5
▪️Others 0
Note: Most of these seats are from South Chhattisgarh#Chhattisgarh #ChhattisgarhElections2023 #AssemblyElections2023… pic.twitter.com/TlcTaTAnRl
வாக்குறுதிகள்: சத்தீஸ்கரில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்தார். முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரசாரம் செய்திருந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வாரி இறைத்திருக்கின்றன.
கடைசி கட்ட சர்வே: இந்நிலையில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் இறுதி கட்ட கடைசி கருத்து கணிப்பை Lok Poll நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த 20 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சியே 16 முதல் 18 இடங்களைக் கைப்பற்றுமாம். பிரதான எதிர்க்கட்சியான பாஜகவுக்கு மொத்தம் 3 முதல் 5 தொகுதிகள்தான் கிடைக்குமாம்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications