2014, 2019 தேர்தலில் சூரத் தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? அரண்டு போய்விடுவீங்க!
சூரத்: நாட்டின் தற்போதைய 18-வது லோக்சபா தேர்தலில் பாஜக முதல் வெற்றியை குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பெற்றுள்ளது. சூரத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் லோக்சபா தேர்தலில் பாஜகவின் முகேஷ் தலால், காங்கிரஸின் நிலேஷ் கும்பானி உள்ளிட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் நிலேஷ் கும்பானி உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் சுயேட்சைகள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் பாஜகவின் முகேஷ் தலால் போட்டியின்றி வென்றுள்ளார். தற்போதைய 18-வது லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.

சூரத் லோக்சபா தொகுதியில்தான் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 4 முறை வென்றார். 1989-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 முறை பாஜக வென்ற தொகுதி. தற்போது 10-வது முறையாக பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.
பாஜக உருவான பின்னர் 1984-ல் சூரத்தில் முதல் தேர்தலை எதிர்கொண்டது. அத்தேர்தலில் பாஜகவுக்கு 44.25% வாக்குகள் கிடைத்தது.
1989 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான லோக்சபா தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவீதம்:
1989- 62.75%
1991- 56.24%
1996- 61.07%
1998- 65.16%
1999- 68.82%
2004- 56.69%
2009- 52.45%
2014- 75.79%
2019- 74.47%.
2019-ல் காங்கிரஸ் கட்சிக்கு 23.16%; 2014-ல் 19.54% வாக்குகள்தான் கிடைத்தன. ஆனால் 2009-ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் 41.70% வாக்குகளைப் பெற்றிருந்தது. 2004-ம் ஆண்டு தேர்தலிலும் கூட காங்கிரஸ் 39.89% வாக்குகளை சூரத் தொகுதியில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications