வாரணாசி தொகுதியில் 'ஹாட்ரிக் வெற்றி'யை அறுவடை செய்ய மே 14-ல் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் மோடி!
வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி மே 14-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தற்போது வரை 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன.

பிரதமர் மோடி போட்டியிடும் உ.பி. வாரணாசி லோக்சபா தொகுதியில் இறுதி கட்டமாக ஜூன் 1-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வாரணாசி லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி (பாஜக), அஜய் ராய் (காங்கிரஸ்), ஏபிஹெச்எம் மகாமண்டலேஸ்வர் ஹேமங்கி சகி உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மே 13-ந் தேதியன்று ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து மே 14-ந் தேதி வாரணாசி தொகுதியில் மோடி வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
வாரணாசி தொகுதியானது 1952 முதல் 1962 வரை காங்கிரஸ் வசம் இருந்தது. 1967-ல் சிபிஎம் கட்சி வென்றது. 1971-ல் காங்கிரஸ், 1977-ல் ஜனதா கட்சி, 1980, 1984-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதன்பின்னர் 1989 தேர்தலில் ஜனதா தளமும் 1991 முதல் 1999-ம் ஆண்டு வரையிலான 4 தேர்தல்களில் பாஜக தொடர்ச்சியாகவும் வென்ற தொகுதி இது. 2004-ம் ஆண்டு காங்கிரஸின் ராஜேஷ் குமார் மிஸ்ரா இத்தொகுதியில் வென்றார். 2009-ம் ஆண்டு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி வெற்றி பெற்றார்.
2014-ல் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வென்று நாட்டின் பிரதமரானார். 2019-ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமரானார். தற்போது 3-வது முறையாக வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:
நரேந்திர மோடி (பாஜக) 581,022 (56.37%)
அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி) 209,238(20.30%)
அஜய் ராய் (காங்கிரஸ்) 75,614 (7.34%)
பிரதமர் மோடி 371,784 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
நரேந்திர மோடி(பாஜக) 674,664 (63.62%)
ஷாலினி யாதவ் (சமாஜ்வாதி கட்சி) 195,159 (18.40%)
அஜய் ராய் (காங்கிரஸ் 152,548 (14.38%)
பிரதமர் மோடி 479,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2024-ம் ஆண்டு தற்போதைய தேர்தலில் காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications