Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 லோக்சபா தேர்தல்கள்! 15 தொகுதிகளில் ஒரே சாதியினர் வெற்றி! பீதியைக் கிளப்பும் பீகார்

Subscribe to Oneindia Tamil

பீகார்: கடந்த 4 பொதுத் தேர்தல்களிலும் பீகாரில் உள்ள 15 தொகுதியில் ஒரே சாதியினரே தொடர்ந்து வெற்றி பெற்றுவருவது தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதியன்று வெளியாகின. அதில் பாஜக மொத்தம் 240 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 99 இடங்களைக் கைப்பற்றியது.

lok sabha election 2024 Bihar Chief minister RJD BJP LJP

தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் மூன்றாவது முறையாகக் கடந்த ஞாயிறு அன்று மோடி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மொத்தம் 72 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

மோடி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு மிக முக்கிய காரணம் நிதிஷ்குமார். அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி பீகாரில் 12 இடங்களில் வெற்றி பெற்றது.

இதே போல் பாஜக 12 தொகுதிகளில் வென்றது. மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

ராம்விலாஸ் பாஸ்வான் கட்சியான ஜன் லோக்சக்தி 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதுவும் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிதான்.

இந்நிலையில் பீகார் மாநில தேர்தல் களம் பற்றியும் வேட்பாளர்கள் பற்றியும் சில விவரங்கள் கிடைத்துள்ளன.

இதன் மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இப்போது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் வரை பீகாரில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் சுமார் 15 தொகுதிகளில் ஒரே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களே தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

lok sabha election 2024 Bihar Chief minister RJD BJP LJP

இவர்களில் ஏழு பேர் உயர்சாதியினர் என்றும் ஆறு பேர் ஒபிசி வகுப்பினர் என்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர் மற்றும் தலித் தலா ஒருவர் என்று தெரிகிறது.

இந்தப் பட்டியலில் உள்ள மொத்தம் 15 தொகுதிகளிலுள்ள இரண்டு தொகுதிகளில் மட்டும் தொடர்ந்து ஒரே வேட்பாளர்கள் (பாசிம் சம்பாரன், பூர்வி சம்பாரன்) களம் கண்டு வருகின்றனர்.

மீதம் உள்ள 13 தொகுதிகளிலும் கடந்த நான்கு பொதுத் தேர்தல்களில் ஒரே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளன. வேட்பாளர்களை மாற்றி கட்சிகள் நிறுத்தினாலும் சாதி பின்புலம் என்னவோ ஒன்றாகவே இருந்து வருகிறது.

ஆக, இதன் மூலம் பீகார் தேர்தல் அரசியலில் சாதி எந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

அரசியல் கட்சிகளின் இந்த மாதிரியான போக்கு குறித்து Centre for the Study of Developing Societies (CSDS) பேராசிரியரும் தேர்தல் ஆய்வாளருமான சஞ்சய் குமார் ஆங்கில பத்திரிகைக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், "கடந்த இருபது ஆண்டுகளாக இது நடக்கிறது

ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் பெரும்பான்மையாக இருப்பதால் இப்படிச் செய்கிறார்கள்.. இந்தக் காரணங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க உதவுகிறது. எனவே வெற்றி பெறும் சாதியை நம்பி வேட்பாளர்களைக் கட்சிகள் களம் இறக்கி வருகின்றன" என்று கூறியுள்ளார்.

lok sabha election 2024 Bihar Chief minister RJD BJP LJP

இதற்கு முன்பாக நடைபெற்ற 2009 தேர்தல் தொடங்கி 2019 தேர்தல் வரை இப்படி ஒரே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வந்தனர். இப்படியான தொகுதிகளின் எண்ணிக்கை 18 ஆக முன்பு இருந்தது. ஆனால் இந்த முறை அவுரங்காபாத், அர்ரா, சமஸ்திபூர் ஆகிய மூன்று தொகுதிகளில் வேறு சாதியினர் வெற்றி பெற்றுவிட்டனர். எனவே சற்று நிலைமை மாற்றி இருக்கிறது.

அரசியல் கட்சிகள் மெகா கூட்டணிகளை அமைக்கும்போது இந்தப் போக்குகள் மாறுகின்றன. அதைத்தான் இந்த தரவு பிரதிபலிக்கின்றது என்றும் அந்தப் பேராசிரியர் விளக்கியுள்ளார். .

2009 முதல் கடந்த 4 தேர்தல்களில் ஒரே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மொத்தம் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மகாராஜ்கஞ்ச், வைஷாலி ஆகிய தொகுதிகளில் ராஜபுத்திர சமூகத்தினர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்.

அவுரங்காபாத், அராஹ் தொகுதிகளில் 2009, 2014, 2019 என அடுத்தடுத்து மூன்று முறை நடைபெற்ற தேர்தல்களில் ராஜ்புத் வேட்பாளர்கள் விலக்கப்பட்டு விட்டுள்ளனர்.

இந்த முறை பனியா ஒபிசி வகுப்பைச் சேர்ந்தவர் அராஹ் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதற்குக் காரணம், மெகா கூட்டணிதான். அப்போது இந்த சாதிய மனநிலை மறைந்து விடுகின்றது. அது எப்படி என்பது பற்றி தனியேதான் ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதிகளில் பட்டியலில் நவாடா, முங்கர் ஆகிய இரண்டும் இடம்பெற்றுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் இந்த இரண்டு இடங்களிலிருந்தும் உயர் சாதி வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். இந்த முறை பாஜகவின் விவேக் தாக்கூர் மற்றும் ஜேடி(யு) வின் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஆகியோர் வென்றுள்ளனர்.
தர்பங்கா, பாட்னா சாஹேப் ஆகிய தொகுதிகள் உயர் சாதியைச் சேர்ந்த பிராமணர் கட்டுப்பாட்டிலிருந்து வருகிறது. அந்த வேட்பாளர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் வெற்றிபெற்று வருகின்றனர்.

தர்பங்காவில் 2009, 2014 இல் கிர்த்தி ஆசாத் வெற்றி பெற்றனர். கோபால்ஜி தாக்கூர் 2019, 2024 இல் வெற்றி பெற்றுள்ளார். பாட்னாவில் 2009, 2014ல் சத்ருகன் சின்ஹா வெற்றி பெற்றார். அதன்பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 2019 , 2024ல் வெற்றி பெற்றுள்ளார்.

பீகாரில் மொத்தம் ஏழு தொகுதிகளில் உயர் சாதியினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதில் மூன்று ராஜபுத்திரர்களின் கைவசம் உள்ளது. ஆறு இடங்கள் ஒபிசி வகுப்பினர் கையில் உள்ளன.

அதாவது மாதேபுரா,மதுபானி,பாடலிபுத்ரா ஆகியவை யாதவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. நாலந்தா, கரகட், பாஸ்சிம் சம்பரன்,குர்மி, குஷ்வாஹா ஆகியவை பனியா கட்டுப்பாட்டில் உள்ளன.

முசாபர்பூரில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த வெற்றி பெற்று வருகிறார். அடுத்து தலித் வேட்பாளர் கயாவில் 2009 முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

2024 தேர்தலில் கயாவில் இருந்து ஹெச்.ஏ.எம் (மதச்சார்பற்ற) கட்சியின் வேட்பாளர் ஜிதன் ராம் மஞ்சி வெற்றி பெற்றார். இவர் இந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+