வெளியூரா நான்? மோடி, அமித் ஷா யாரு தெரியுமா? விகே பாண்டியன் ஒரே போடு!
புவனேஸ்வர்: மக்களவைத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கும் நிலையில் பாஜகவின் முக்கிய குறியாக இருக்கிறார் பிஜு ஜனதா தள கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த விகே பாண்டியன். பாண்டியனை குறி வைத்து பாஜக பல்வேறு விமர்சனக் கணைகளை தொடுத்து வரும் நிலையில் அதனை கண்டுகொள்ளாமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

ஒடிசா மாநிலத்தை பொருத்தவரை மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சட்டமன்றத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடக்கிறது.
ஒடிஷா தேர்தல்: இதுவரை இரண்டு கட்ட தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில் இன்னும் இரண்டு கட்ட தேர்தல்கள் ஒடிசா மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவின் பார்வை தற்போது ஒடிசா மாநிலத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. அங்கு ஏற்கனவே மூன்று முறை பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து அங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
விகே பாண்டியன்: ஒடிசா மாநிலத்தைப் பொறுத்தவரை 25 ஆண்டுகளாக முதலமைச்சராக நவீன் பட்நாயக் தொடர்கிறார். இந்த முறையும் அவருக்கே வெற்றி வாய்ப்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. நவீன் பட்நாயக்கன் நம்பிக்கைக்குரிய வலதுகரமாகவும் தளபதியாகவும் திகழ்பவர் தமிழகத்தைச் சேர்ந்த விகே பாண்டியன். பஞ்சாப் கேடர் ஐஏஎஸ்அதிகாரியாக இருந்த அவர் ஒடிசா மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு மக்களின் நன்மதிப்பை பெற்று அவர் முதலமைச்சரின் தனி உதவியாளராகவும் இருந்தார்.
தேர்தல் வியூகம்: நவீன் பட்நாயக்கின் நம்பிக்கையை பெற்ற அவர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலேயே இணைத்துக் கொண்டார். தற்போது பிஜு ஜனதா தளம் கட்சியின் நம்பிக்கை தளபதிகளில் ஒருவராக இருக்கும் அவர் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறார். அவரது வியூகத்தின்படியே தற்போது ஜனதா தளம் தேர்தலை சந்திக்கிறது. நவீன் பட்நாயக் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் அவரது வாரிசாக விகே பாண்டியனே இருப்பார் என கூறப்படுகிறது. இதையடுத்து அவரை நோக்கி விமர்சனக் கணைகளை தொடுத்து வருகிறது பாஜக.
டார்கெட் பாஜக: கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவின் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது எனவும், பூரி ஜெகநாதர் கோயிலில் பொக்கிஷ அறையில் காணாமல் போன சாவி தமிழகத்தில் இருக்கிறது என விகே பாண்டிய மறைமுகமாக விமர்சித்து பேசினார். இது பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் இருந்து பலத்த கண்டனங்களை பெற்று தந்தது. அதுமட்டுமல்லாமல் அமித்ஷாவும் விகே பாண்டியனே குறிவைத்து பேசினார்.
கூலாக பதில்: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரசாரத்தில் பேசிய அமித் ஷா ஒடிசாவை ஒரு தமிழர் ஆள வேண்டுமா அல்லது ஒடியா மொழி பேசும் இளைஞர் ஆள வேண்டுமா? பெருமைமிக்க இந்த மாநிலத்தை ஒரு தமிழர் வழிநடத்தி செல்லலாமா? என கேட்டதோடு பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒடிய மொழி பேசும் ஒரு இளைஞர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என பேசினார். இதையடுத்து அமித்ஷா இனவாதம் பேசுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் விகே பாண்டியன்.
சுற்றுலா பயணிகள்: அமித் ஷாவின் கருத்து குறித்து பதிலளித்துள்ளார் விகே பாண்டியன். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை சுற்றுலா பயணிகளாக வருபவர்கள் என்னை குறித்து பேசுகிறார்கள். நான் ஒடிசாவின் மக்களோடு மக்களாக பயணித்திருக்கிறேன். நவீன் பட்நாயக்கன் குதிரை போல செயல்பட்டு வருகிறேன். 5 வருடத்திற்கு ஒரு முறை வரும் டூரிஸ்ட்களுக்கு ஒடிசாவின் தலையும் தெரியாது வாலும் தெரியாது. ஒடிசா மக்கள் அவர்களை அரசியல் சுற்றுலாப் பயணிகளாகப் பார்க்கிறார்கள்" என கூறியிருக்கிறார்.
சிறப்பாக செயல்படும்: அமித் ஷா போன்ற பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகர்கள் போன்ற பல வெளியாட்கள் ஒடிசாவின் தலைநகருக்கு பெயரிடவே போராடுவார்கள். ஒடிசாவில் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், நவீன் பட்நாயக்கின் பிஜேடி கணிசமான பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பாண்டியனின் கூற்றுப்படி, பிஜேடி 2019 தேர்தலில் 21ல் 12 இடங்களில் வெற்றி பெற்றதை விட சிறப்பாக கூடுதலாக வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications