லோக்சபா தேர்தல்: 'ஜெகன் அண்ணா'வுக்கு அலாரம்- நாயுடு ரேஸில் 'சீறிப் பாய்கிறார்- இண்டியா டிவி சர்வே
விசாகப்பட்டினம்: லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு காத்திருப்பதாக "இண்டியா" டிவி சர்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் 2019-ம் ஆண்டு 25 லோக்சபா தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளை அள்ளியது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி வெறும் 3 தொகுதிகளிதான் வென்றது. இதனால் தெலுங்குதேசம் கட்சியின் எதிர்காலமே என்னவாகுமோ என ஊடகங்கள் எழுதின.

2024 லோக்சபா தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மொத்தம் 49.89% வாக்குகளை அள்ளியது. 3 இடங்களில் வென்றாலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 40.19% வாக்குகளைப் பெற்றது.
ஆந்திரா மாநில சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலுடன் நடைபெற உள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள்.
ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கக் கூடும் என்கிறது 'இண்டியா' டிவி சர்வே.
ஆந்திரா தொடர்பான "இண்டியா டிவி" கருத்து கணிப்பு: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 15; தெலுங்குதேசம் 10 இடங்களில் வெல்லுமாம். அதாவது 2010 தேர்தலை ஒப்பிடுகையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளைப் பறிகொடுக்கும்; தெலுங்குதேசம் கட்சி அந்த 7 இடங்களை கைப்பற்றும் என்கிறது இக்கருத்து கணிப்பு. இது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் டைம்ஸ் நவ் சர்வே ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 25 தொகுதிகளில் 24 முதல் 25 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் வாக்கு சதவீதமும் 51.10% ஆக உயரும் என டைம்ஸ் நவ் சர்வே தெரிவித்திருந்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்கு 36.40% ஆக வாக்கு சதவீதம் குறையக் கூடும் என்றது டைம்ஸ் நவ் சர்வே. நடிகர் பவன் கல்யாண் கட்சியின் ஜனசேனா சுமார் 10% வாக்குகளைப் பெறக் கூடும் என்பதும் டைம்ஸ் நவ் சர்வே முடிவாக இருந்தது.












Click it and Unblock the Notifications