காதலால் விபரீதம்: கல்லூரி மாணவி, பெற்றோரை கொலை செய்த உறவினர்கள்
பாட்னா: பீகாரில் காதல் விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவி, அவரது பெற்றோர் ஆகியோர் உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள கேவல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வகீல் யாதவ்(60). அவரது மனைவி அனிதா தேவி(55). அவர்களின் மகள் புஷ்பா குமாரி(19). அவர் விக்ரம்கஞ்ச் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
புஷ்பா தன்னுடன் படித்த மாணவர் ஒருவரை காதலித்துள்ளார். இதற்கு புஷ்பாவின் உறவினர்கள் பிரதீப் யாதவ் மற்றும் அமித் யாதவ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு பிரதீப் மற்றும் அமித் புஷ்பாவின் வீட்டிற்கு வந்து அவரது காதல் விவகாரம் தொடர்பாக அவரின் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றவே அவர்கள் துப்பாக்கியை எடுத்து புஷ்பா மற்றும் அவரது தாயை சுட்டுக் கொன்றனர். மேலும் புஷ்பாவின் தந்தையை பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
படுகாயமடைந்த வகீல் யாதவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சாசராம் சாதர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications