கொடுமை.. இந்து பெண்ணை காதலித்து.. கல்யாணம் செய்த இஸ்லாமிய இளைஞர்.. ஜெயிலில் அடைக்கப்பட்ட பரிதாபம்!
இந்து பெண்ணை மணந்த முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
கான்பூர்: இந்து பெண்ணை காதலித்ததால், இஸ்லாமிய இளைஞனை உபி போலீசார் ஜெயிலில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்யாணம் செய்து கொள்வதற்காக நடைபெறும் மதமாற்றத்தை லவ் ஜிகாத் என்று சிலர் கூறி வருகின்றனர்.. இந்த விவகாரம் சில மாதங்களாகவே நாடு முழுவதும் விஸ்வரூபமெடுத்து வருகிறது.
கல்யாணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று ஒரு வழக்கில் அலகாபாத் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.. இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்கள் சிலவற்றில் லவ் ஜிகாதுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

லவ் ஜிகாத்
சில நாட்களுக்கு முன்புகூட ஹரியானாவில் ஒரு கோர சம்பவம் நடந்தது.. பரிதாபாத் மாவட்டத்தின், பல்லப்கர் என்ற இடத்தில் 21 வயது பெண் நிகிதா என்பவர், காலேஜில் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது துப்பாக்கியாலேயே சுட்டு கொல்லப்பட்டார்.

திருமணம்
இதுவாவது பரவாயில்லை.. இந்து பெண்ணும் முஸ்லீம் இளைஞரும் திருமணம் செய்து கொண்டதாக யாரோ போலீசுக்கு சொல்லவும், என்ன ஏது என்று கூட கேட்காமல், உத்திரபிரதேச போலீஸார் முஸ்லீம் மணமக்களை பிடித்து சென்றுள்ளனர்.. ஆனால், தம்பதி இருவருமே முஸ்லீம்கள்தான் என்பது விசாரணையில்தான் தெரியவந்தது.. அதற்குள் அந்த மாப்பிள்ளையை பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்துவிட்டனர் உபி போலீசார்!

கல்யாணம்
இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இந்து பெண்ணை காதலித்து கல்யாணம் செய்த முஸ்லிம் இளைஞனை ஜெயிக்குள்ளேயே அடைத்துவிட்டனர் போலீசார். உத்தர பிரதேசத்தில் பஜ்ரங் தள அமைப்பினரின் லவ் ஜிகாத் புகாரின் பேரில் இந்துப் பெண்ணை காதல் திருமணம் செய்த முஸ்லிம் இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார். முரதாபாத் பகுதியை சேர்ந்தவர் பிங்கி... 22 வயதாகிறது.

பஜ்ரங் தள்
இவர் ரஷீத் என்ற இளைஞரை காதலித்தார்.. சில மாதங்களுக்கு முன்பு கல்யாணமும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிசம்பர் 6-ம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்ய சென்றுள்ளனர்... அப்போது பஜ்ரங் தள் அமைப்பினர், சம்பந்தப்பட்ட பெண்ணை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.. அவர்களது கல்யாணம் லவ் ஜிகாத் என்றும் புகார் சொன்னார்கள்.

ஜெயில்
அந்த புகாரின்பேரில் கந்த் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், பிங்கியை பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரது கணவர், மற்றும் அவரது மைத்துனரை மதம் மாற கட்டாயப்படுத்தியதாக சமீபத்தில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி ஜெயிலில் அடைத்தனர்.

கோர்ட் கண்டிப்பு
இந்த நிலையில், இந்த வழக்கு முரதாபாத் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு வந்தது... அப்போது நீதிபதியிடம் பிங்கி, "நான் மேஜர்.. விருப்பப்பட்டுதான், ரஷீத்தை கல்யாணம் செய்து கொண்டேன்" என்ற கூறினார். இதனை கேட்ட நீதிமன்றமும், அவரை கணவர் வீட்டிற்கு செல்ல அனுமதித்தது... மேலும் போலீசாரின் இந்த அராஜக செயலையும் கோர்ட் கண்டித்தது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications