சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு... சென்னையில் புதிய விலை ரூ.888... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
Recommended Video

டெல்லி: கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.இதன்படி சென்னையில் இனி இன்று முதல் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 888.50-க்கு விற்கப்படும்.
மானியம் அல்லாத சிலிண்டரின் விலை ரூ. 59 உயர்ந்துள்ளது. அதுபோல் மானியம் உள்ள சிலிண்டர்களின் விலையை ரூ. 2.89 அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி காட்டியுள்ளன.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் அளித்த அறிக்கையில், கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படுகிறது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. சர்வதேச விலையில் மாற்றம் ஏற்பட்டதாலும், அன்னிய செலாவணியில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாகவும் சிலிண்டர்களின் விலையை உயர்த்த முன்வந்துள்ளோம்.
மானியம் பெறும் சிலிண்டர்களின் விலை ரூ. 2.89 ஆக உயர்த்தப்பட்டுள்ளது ஜிஎஸ்டியால் மட்டுமே ஆகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் மானியம் உள்ள சிலிண்டர்களின் விலை ரூ. 502.4-க்கு விற்கப்படும்.
[சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்- எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு]
அக்டோபர் முதல் வாடிக்கையாளர்களுக்கு மானியத் தொகை ரூ. 320.49 முதல் ரூ. 376.60-ஆக உயர்த்தப்படுகிறது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கேஸ் சிலிண்டர் விலையும் ஏற்றம் கண்டுள்ளதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
சென்னையில் மானியமில்லாத ஒரு சிலிண்டரின் விலை தற்போது ரூ.838.50-க்கு விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்துக்கு பின்னர் ரூ. 888.50-க்கு விற்கப்படும். மானியமுள்ள சிலிண்டரின் விலை தற்போது ரூ. 470-க்கு விற்கப்படுகிறது. இனி இந்த சிலிண்டர்களின் விலை ரூ. 472.89 ஆக உயரும்.
வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு இதுநாள் வரை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 470 மானியத்தை அரசு செலுத்தி வந்தது. இந்நிலையில் இனி ரூ.510 வங்கிக் கணக்கில் மானியமாக செலுத்தப்படும். கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications