சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்- எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
Recommended Video

சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்- எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை: சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் மீன்பிடி படகு தயாரித்தல், மீன்பிடி படகு பழுதுபார்க்கும் தளம், படகுத்துறை மேம்பாடு, கல்வி மேம்பாட்டு பணிகள், அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்குதல், நலவாழ்வுத் திட்டங்களுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துதல், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், தொழிற்பயிற்சி வழங்குதல், குடியிருப்புகளை மேம்படுத்துதல், விளையாட்டு மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
நகரப் பகுதிகளில் வீடுகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் குறிப்பாக, சென்னையில் வாழும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அ.தி.மு.க. அரசு அனைத்துத் தரப்பினருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் தளப் பரப்பளவு குறியீட்டை தற்போதுள்ள 1.5-ல் இருந்து 0.5 உயர்த்தி, 2.0 ஆக மாற்றியமைக்கப்படும்.
அந்த அறிக்கையை விரைந்து பரிசீலித்து இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். சென்னையின் தொழில் வளர்ச்சி, அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வின் காரணமாக தற்போதுள்ள சென்னை விமான நிலையம் வருகின்ற 2024-ம் ஆண்டில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை கையாள்வதில் முழு நிறைவை அடைந்துவிடும்.
எனவே புதிய விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது என்பதை உணர்ந்த அ.தி.மு.க. அரசு சென்னைக்கு அருகில் உலகத் தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் ஒன்றை அமைக்கும். சென்னை அடையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சர்தார் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் சாலை மேம்பாலம் கட்ட, ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்ஜிஆர் பஸ் நிலையம் என்ற பெயர் சூட்டப்படும் என்றார். முன்னதாக ரூ.18 கோடி மதிப்பிலான 13 புதிய திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவப்படங்கள் திறக்கப்பட்டன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications