"பழிவாங்கும் பேச்சு".. அமித்ஷா மீதான குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியது கோர்ட்!!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா மீது உ.பி., போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, லக்னோ கோர்ட் திருப்பி அனுப்பியது. இதனால் உ.பி., போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமித்ஷா மீதான 'பழிவாங்கும்' பேச்சு வழக்கின் குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியது கோர்ட்!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் கலவரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக தலைவர் அமித்ஷா மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது.

Lucknow court returns chargesheet against Amit Shah

உ.பி. பிஜ்னோரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முசாஃபர்நகர் கலவரம் குறித்து அமித் ஷா பேசினார். அப்போது "நம்மை காயப்படுத்தியவர்களை தேர்தலில் பழிவாங்க வேண்டும். அநீதி இழைத்தவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்'' என்று அவர் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது.

இதனையடுத்து அமித் ஷா மீது "மக்களை வன்முறைக்குத் தூண்டியது (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 153), குழுக்கள் இடையே மோதலை உருவாக்கியது (பிரிவு 125) ஆகிய பிரிவுகளின் கீழ் முசாஃபர் நகர் மாவட்ட போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் முசாஃபர்ர் நகர் போலீஸார் அமித் ஷாமீது நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். ஆனால் விசாரணையை முழுமையாக நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு கூறி அதனை திருப்பி அனுப்பி வைத்துவிட்டது லக்னோ நீதிமன்றம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+