மகேந்திர சிங் டோணி... டிக்கெட் கலெக்டர்.. செளத் ஈஸ்டர்ன் ரயில்வே.. ரிப்போர்ட்டிங் பார் டூட்டி சார்!!

Subscribe to Oneindia Tamil

மும்பை: வந்து விட்டது மகேந்திர சிங் டோணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள டோணி படத்தின் டீசர்.

"சொத் சொத்" என்று ஆடி வந்த ஆட்டக்காரர்கள் மத்தியில் புயல் போல வந்தவர் தலைமுடியழகன் டோணி. இன்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் 'தல' என்று அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளார் டோணி.

அதிரடி வீரராக அறியப்பட்ட டோணியின் வாழ்க்கை வரலாற்றில் அவர் கடந்து வந்த படிகள் நிறைய நிறைய.. சவால்கள், சோதனைகள், வேதனைகள் என டோணிக்கும் பல ஏற்ற இறக்கங்கள் உண்டு.

எம்.எஸ்.டோணி- தி அன்டோல்ட் ஸ்டோரி

எம்.எஸ்.டோணி- தி அன்டோல்ட் ஸ்டோரி

M.S. Dhoni - The Untold Story என்ற பெயரில் தற்போது டோணியின் வாழ்க்கைத் திரைப்படமாகியுள்ளது. நீரஜ் பாண்டே இந்த இந்திப் படத்தை இயக்கியுள்ளார்.

செப்டம்பர் 2ல் ரிலீஸ்

செப்டம்பர் 2ல் ரிலீஸ்

இப்படம் செப்டம்பர் 2ம் தேதி ரிலீஸாகிறது. பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் இன்ஸ்பயர்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

சுஷாந்த் சிங் ராஜ்புத்

சுஷாந்த் சிங் ராஜ்புத்

இப்படத்தில் டோணி வேடத்தில் நடித்திருப்பவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரது மனைவி சாக்ஷி சிங் வேடத்தில் கியாரா அத்வானி நடித்துள்ளார். படத்தில் அனுபம் கெரும் உண்டு.

டிக்கெட் கலெக்டர்

டோணி கிரிக்கெட் ஆட வருவதற்கு முன்பு ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக இருந்தவர். அதை வைத்து இந்த டீசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் பின்னணியில் டோணி அமர்ந்திருப்பது போன்ற காட்சியும் இதில் இடம் பெற்றுள்ளது.

பார்க்கலாம்.. டோணியைப் போலவே இப்படமும் அதிரடியாக இருக்குமா என்பதை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+