கொடுமையை பாருங்க.. ஐந்து நாளில் இரண்டு முறை.. 9 பேரால் சிக்கி சீரழிந்த 13 வயது சிறுமி.. ஷாக்!
போபால்: மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமி, கடந்த ஐந்து நாட்களில் இரண்டு முறை கடத்தி 9 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. இந்த கொடூரத்தை இரண்டு கும்பல்கள் நிகழ்த்தி இருப்பது போலீசாரின் விசாரணைக்கு பின் தெரியவந்துள்ளது.
முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு, 'சம்மன்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த பதினைந்து நாட்கள் பொது விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வரும் இந்த நேரத்தில் பெண்ணுக்கு எதிராக நடந்துள்ள இந்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான கடந்த ஆறு நாட்களில் நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாலியல் பலாத்காரம்
மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமி கடந்த ஜனவரி 4 ஆம் தேதி அவருக்கு தெரிந்த இளைஞன் ஒருவரால் கடத்தப்பட்டுள்ளார்- சிறுமியை கடத்தி சென்ற இளைஞன், தனது ஆறு நண்பர்களுடன் இணைந்து இரண்டு நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். ஜனவரி 5 ஆம் தேதி சிறுமியை அவர்கள் விட்டுள்ளார்கள். விடுவிப்பதற்கு முன், யாரிடமும் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதால் மிரட்டலுக்கு பயந்து சிறுமி புகார் அளிக்கவில்லை.

7 பேர் கும்பல்
ஆறு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 11 ஆம் தேதி மீண்டும் இளைஞரால் சிறுமி கடத்தப்பட்டார். அந்த இளைஞனுடன் சேர்த்து 7 பேர் கும்பல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது, காடுகளிலும், சாலையோரங்களில் உள்ள உணவகத்திலும் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

9 பேர் கும்பல்
அதுமட்டுமின்றி சிறுமியை உணவகத்தில் இருந்த போது மீட்ட இரண்டு லாரி ஓட்டுநர்கள் அவர்களும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள். இறுதியாக சிறுமி வெள்ளிக்கிழமை அதிகாலை தப்பி ஓடி தனது வீட்டிற்கு திரும்பி வந்து நடந்த கொடுமையை கூறியுள்ளார். மொத்தம் 9 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

6 பேர் கைது
முன்னதாக ஜனவரி 9 ஆம் தேதி, சித்தி மாவட்டத்தில் 48 வயது பெண், நான்கு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் பெண்ணிண் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை சொருகிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜனவரி 11 ஆம் தேதி, 13 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். ஜனவரி 12ம் தேதி
உஜ்ஜைன் மாவட்டத்தில் இளம் பெண் தனது கணவர் மற்றும் மாமியாரால் கொடூரமாக தாக்கப்பட்டார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் மத்திய பிரதேசத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்த கொடூரங்கள்‘
முன்னதாக ஜனவரி 9 ஆம் தேதி, சித்தி மாவட்டத்தில் 48 வயது பெண், நான்கு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் பெண்ணிண் பிறப்புப்பில் இரும்பு கம்பியை சொருகிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜனவரி 11 ஆம் தேதி, 13 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். ஜனவரி 12ம் தேதி
உஜ்ஜைன் மாவட்டத்தில் இளம் பெண் தனது கணவர் மற்றும் மாமியாரால் கொடூரமாக தாக்கப்பட்டார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் மத்திய பிரதேசத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications