மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: சுறுசுறுப்பாக வாக்களித்த மக்கள்.. அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. 73.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 230 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 114 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. 109 இடங்களில் பாஜக வென்று எதிர்க்கட்சியானது. இந்த நிலையில் முதல்வராக கமல்நாத் பதவியேற்றார்.

அவர் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 22 பேர் ஆட்சிக்கு எதிராக திரும்பினார்கள். இவர்கள் கட்சியில் இருந்தும் விலகினார்கள். அது போல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
இதையடுத்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது. இதையடுத்து மத்திய பிரதேசத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் 4ஆவது முறையாக பதவியேற்றார். ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் இணைந்து தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்.
இந்த நிலையில் இந்த ஆண்டுடன் மத்திய பிரதேசத்தில் சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. 230 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 73.86 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி இந்த மாநிலத்தில் 230 தொகுதிகளிலும் 5.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களில் 2.88 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 2.72 கோடி பேர் பெண் வாக்காளர்கள். 22.36 லட்சம் இளைஞர்கள் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கவுள்ளார்கள். வாக்காளர்கள் கட்டாயம் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். பாஸ்போர்ட், ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகிய ஆவணங்களையும் கொண்டு செல்லலாம்.
இவையும் இல்லாவிட்டால் வாக்காளர் ரசீதை காட்டி வாக்களிக்கலாம். இந்த தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா இல்லை காங்கிரஸ் கட்சி வெல்லுமா என்பதை டிசம்பர் 3 ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications