பாஜகவிற்கு புதிய தலைவலி.. ம.பியில் காங்கிரஸுடன் கைகோர்க்கிறது பகுஜன் சமாஜ்!
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும் கடந்த ஒரு மாதம் முழுக்க தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலின் செமி பைனலாக பார்க்கப்பட்டது.
இதில் அதிக கவனம் ஈர்த்த மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.

என்ன வரலாறு
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003ம் ஆண்டில் இருந்தே ஆட்சியில் இல்லை. கடைசியாக அங்கு திக் விஜய் சிங் காங்கிரஸ் சார்பாக பலமான முதல்வராக இருந்தார். அதன்பின் உமா பாரதி தொடங்கி இப்போது சிவராஜ் சிங் சவுகான் வரை 15 வருடம் அங்கு பாஜக கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது.

நெக் டு நெக்
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தற்போது முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலவரங்கள் படி மத்திய பிரதேசத்தில், பாஜக 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸும் 110 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. மத்திய பிரதேசத்தில் மெஜாரிட்டி பெற 116 தொகுதிகள் தேவை.

உதவி தேவை
இதனால் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க இரண்டு கட்சிக்கும் சுயேட்சைகள் ஆதரவோ, பகுஜன் சமாஜ் ஆதரவோ, இல்லை கம்யூனிஸ்டுகளின் ஆதரவோ தேவை. அங்கு சுயேச்சை 4 இடத்திலும், பகுஜன் சமாஜ் 3 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

ஆதரவு அளிக்க முடிவு
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கும் நிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் பாஜக இரண்டிற்கும் பெரும்பான்மை இல்லை என்ற நிலை ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications