தேர்தல் வெற்றிக்காக இப்படியா? காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி! இப்படியொரு பின்னணியா! அடடா
போபால்: மத்திய பிரதேசத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் செருப்படி வாங்கி கொண்ட வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக ஆட்சி நடந்து வந்தது. சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்தார். இந்நிலையில் தான் மீண்டும் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 17 ம் தேதி 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று ஒரே கட்டமாக மத்திய பிரதேசத்தில் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. இதில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக-காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும், ஆட்சியை தக்கவைக்க பாஜகவும் போராடி வருகிறது. இன்று தேர்தல் முடிவடைந்துள்ளதால் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பதை அறிய நாம் டிசம்பர் 3ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. தேர்தலுக்கு நடுவே இந்த வீடியோ வைரலாகி உள்ளது. வீடியோவில் மத்திய பிரதேச மாநிலத்தின் ரட்லாம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சாவை முதியவர் ஒருவர் செருப்பால் தொடர்ந்து தாக்குகிறார். அவரது தலை, முகத்தில் அந்த நபர் செருப்பால் அடிக்கிறார். அதனை பராஸ் சக்லேச்சா தடுக்காமல் சிரித்தபடி அடிவாங்கிவிட்டு அவரது காலை தொட்டு வணங்கி செல்கிறார்.
இந்த வீடியோ விவாதத்தை கிளப்பிய நிலையில் தற்போது அதன் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதாவது அந்த வீடியோவில் காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சாவை செருப்பால் தொடர்ந்து அடித்த நபரை அந்த பகுதி மக்கள் நடமாடும் பாபா என அழைக்கின்றனர். இஸ்லாமியரான இவரை அந்த பகுதி மக்கள் ஃபகிரா பாபாஜி என நம்புகின்றனர். இவர் சாதாரணமாக சாலையோரம் தான் சுற்றி வருகிறார். இவர் செருப்பால் அடிப்பதை ஆசீர்வாதமாக பலரும் நம்புகின்றனர்.
இதனால் அவரை பார்ப்போர் செருப்பு கொடுத்து அடி வாங்கி கொள்கின்றனர். அந்த வகையில் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஃபகிரா பாபாஜியிடம் காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சா புதிய ஜோடி செருப்பு வாங்கி அடிவாங்கி உள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தான் அவரது இந்த செயலை பலரும் மூடநம்பிக்கை என விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications