டஃப் ஃபைட்! மத்திய பிரதேசத்தில் வெற்றிக்கோட்டை எட்டும் காங்கிரஸ்! டைம்ஸ் நவ் ETG எக்சிட்போல் ரிசல்ட்
போபால்: மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படும் 5 மாநில சட்டமன்ற தேர்தலின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் மத்திய பிரதேசத்தில் அதிக இடங்களைப் பிடித்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்கிறது டைம்ஸ் நவ் - ETG எக்ஸிட் போல் முடிவுகள்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என நம்புகிறது. கடந்த 2018 தேர்தலில், காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்றது. ஆனால் 2020 இல் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான ஒரு கிளர்ச்சி, பா.ஜ.க.,வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் முழுவேகத்தில் தேர்தல் பணியாற்றியது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மத்தியப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவுவதாக கணித்துள்ளன. டைம்ஸ் நவ் - ETG எக்சிட் போல் கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் கட்சி 110-124 இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாஜக 106-116 இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் - ETG எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பின்படி, பந்தேல்கண்ட் பகுதியில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, ஜான் கி பாத் எக்சிட் போலில், பா.ஜ.க 100-123 இடங்களையும், காங்கிரஸ் 102-125 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறியுள்ளது. TV9 Bharatvarsh-Polstrat பா.ஜ.கவுக்கு 106-116 இடங்களும், காங்கிரஸுக்கு 111-121 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் பா.ஜ.கவுக்கு 118-130 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 97-107 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications