"மார்க் ஷீட் தர மாட்டியா?" தலைமை ஆசிரியையை பெட்ரோல் ஊற்றி எரித்த "எக்ஸ்" மாணவன்.. பரபர சம்பவம்
தலைமை ஆசிரியை விமுக்தா சர்மாவிடம் மாணவன் அசுதோஷ் பல முறை கேட்டும், அவர் மதிப்பெண் பட்டியல் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
போபால்: மார்க் ஷீட் வழங்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் கல்லூரி மாணவன், தலைமை ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த தலைமை ஆசிரியை, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவனை போலீஸார் மீட்டு அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கல்லூரி மாணவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு தேர்வில் அரியர்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிஎம் ஃபார்மசி கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் தலைமை ஆசிரியையாக விமுக்தா சர்மா (50) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, இந்தக் கல்லூரியில் படித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறியவர் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவத்சவா (23). இவர் ஒரு செயல்முறை தேர்வில் (Practical Exam) அரியர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மார்க் ஷீட் கேட்டு..
இதனால் அசுதோஷ் சர்மாவுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் அவருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், அவர் வேலை தேடிச் சென்ற சில நிறுவனங்கள், பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை.. மதிப்பெண் பட்டியலையாவது (மார்க் ஷீட்) கொண்டு வாருங்கள் எனத் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, கல்லூரியில் உள்ள தனது மதிப்பெண் பட்டியலை கேட்டு கடந்த ஓராண்டாக அலைந்து வந்துள்ளார் அசுதோஷ் சர்மா.

இழுத்தடித்ததால் ஆத்திரம்
ஆனால், அவரது வகுப்பு ஆசிரியர்களோ தலைமை ஆசிரியர் ஒப்புதல் அளித்தால்தான் மதிப்பெண் பட்டியலை தர முடியும் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, தலைமை ஆசிரியை விமுக்தா சர்மாவிடம் மாணவன் அசுதோஷ் பல முறை கேட்டும், அவர் மதிப்பெண் பட்டியல் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அசுதோஷ் சர்மாவுக்கு கிடைத்த வேலைகளும் பறிபோயின. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அசுதோஷ், தலைமை ஆசிரியையை பழிவாங்க முடிவு செய்தார். இதன்பேரில், நேற்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவன் அசுதோஷ், தலைமை ஆசிரியையிடம் மார்க் ஷீட் கேட்டுள்ளார்.

பெட்ரோல் ஊற்றி
அப்போது வழக்கம் போல அவர் அலட்சியமாக பதிலளித்ததாக தெரிகிறது. இதையடுத்து, தன்னிடம் இருந்த பெட்ரோலை தலைமை ஆசிரியை விமுக்தா சர்மா மீது ஊற்றி மாணவன் அசுதோஷ் தீ வைத்தார். விமுக்தா சர்மாவின் அலறல் சத்தத்தை கேட்ட மற்ற பேராசிரியர்களும், மாணவர்களும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 80 சதவீதம் தீக்காயம் பட்டிருப்பதால் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அங்கிருந்து தப்பிச் சென்று அருவி ஒன்றில் விழுந்து தற்கொலை செய்ய முயன்ற அசுதோஷை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications