ம.பி. தேர்தலில் அரச பரம்பரை வேட்பாளர்கள் 12 பேர் போட்டி!
போபால்: மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 12 அரச பரம்பரை வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் வரும் 25ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 12 அரச பரம்பரையினர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 8 பேர் பாஜகவையும், 4 பேர் காங்கிரûஸயும் சேர்ந்தவர்கள்.

ரகோகர் தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கின் மகன் ஜெய்வர்தன் சிங் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜேஷ் தகாட் போட்டியிடுகிறார். தற்போதைய குவாலியர் எம்.பி.யான யசோதரா ராஜே சிந்தியா சிவபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ராஜ்கர் மாவட்டம் கில்ச்பூர் தொகுதியில் போட்டியிடும் திக்விஜய் சிங்கின் உறவினரான பிரியவிரத சிங்கிற்கு எதிராக பாஜக சார்பில் ஹசாரிலால் டாங்கி களத்தில் உள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த சகோதரர்களான குன்வர் விஜய் ஷா மற்றும் சஞ்சய் ஷா முறையே ஹர்சுத் மற்றும் திமார்னி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதில் விஜய் ஷா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான சூரஜ் பன் சிங் சோலங்கியையும், அவரது சகோதரரான சஞ்சய் ஷா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் குமாரையும் எதிர்கொள்கின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் பிரமுகரான மன்வேந்திர சிங், மஹாராஜ்பூர் தொகுதியில் தற்போது பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
மேலும் அரச பரம்பரையைச் சேர்ந்த மாயா சிங், திவ்ய ராஜா சிங், துகோஜி ராவ் பவார், ஹர்ஷ் குமார் சிங் ஆகியோர் பாஜக சார்பிலும், விக்ரம் சிங் நாடிராஜா, மஹேந்திர சிங் கலுகேடா ஆகியோர் காங்கிரஸ் சார்பிலும் மத்தியப் பிரதேச தேர்தல் களத்தில் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications