தலைகீழா திருப்பிப் போட்டாங்களே! மத்திய பிரதேசத்தில் சுயேட்சைகளால் அலறும் காங்கிரஸ், பாஜக! என்ன கதை?
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், சுயேட்சைகள் மீது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண் வைத்துள்ளன.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அங்கு ஆட்சி அமைக்க 116 இடங்களை வெல்ல வேண்டும். மாநிலம் முழுவதும் மொத்தம் 77.15 சதவிகித வாக்குகள் பதிவாகின. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சமபலத்துடன் உள்ளன. இந்த இரு கட்சிகளுக்கிடையே டஃப் ஃபைட் நிலவுவதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உட்பட 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. ம.பியில் ஆளும் பாஜக, ஐந்தாவது முறையாக ஆட்சியை தொடர முயல்கிறது. இதை முறியடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் பணிகளை ஆற்றியுள்ளது. இங்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டாலும், பிரதானமாக பாஜக, காங்கிரஸுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவி வருகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்ட நிறுவனங்களில் சில மீண்டும் பாஜக ஆட்சி எனக் குறிப்பிட்டனர். வெகுசில ஊடகங்கள் காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சி அமைக்கும் எனக் கணித்துள்ளன. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் கடும் போட்டி நிலவி உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அங்கு சுயேச்சையாகப் போட்டியிட்ட வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு வலை வீசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ம.பியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, இந்த தேர்தலில், காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே, தங்கள் வேட்பாளர்களை மிகவும் கவனமாகத் தேர்வு செய்தன. பல முக்கிய தலைவர்களுக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, அவர்களில் பலர் தாம் முன்பு வென்ற தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.
சுயேட்சைகளாக களமிறங்கியவர்களில் சிலருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களை தங்கள் பக்கம் சேர்க்க, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் முயன்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை சூடுபிடித்து, சுயேட்சைகள் பக்கம் காற்று ஓங்கி அடிக்கும்போது, இந்த முயற்சி இன்னும் தீவிரம் அடையும் என்றும், சுயேட்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் கொண்டு வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக மத்திய பிரதேசத்தில் சுயேட்சைகள் மீது காங்கிரஸ், பாஜக என இரு முக்கிய கட்சிகளுமே சுற்று போட்டிருப்பதற்குக் காரணம், அங்கு தனி மெஜாரிட்டி பெறுவதற்கு ஒருசில தொகுதிகள் குறைந்து விடக்கூடாது என்பதே. கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் ம.பி.யில் 4 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். இதர கட்சிகளில் பகுஜன் சமாஜுக்கு 1 , சமாஜ்வாதிக்கு 2 தொகுதிகளும் கிடைத்திருந்தன.
ம.பியில் மெஜாரிட்டிக்கு 116 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 114, பாஜகவுக்கு 109 இடங்கள் கிடைத்திருந்தன. இதையடுத்து, சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக கமல்நாத் ஆட்சி அமைத்தார். எனினும், ஒன்றரை வருடத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தனர்.
பிறகு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்று, பாஜக அதிக இடங்களில் வென்ற நிலையில் பாஜக ஆட்சி அமைத்தது. இதையடுத்து பாஜகவுடன் சுயேச்சைகளும் இணைந்து விட்டனர். எனவேதான், தற்போது வெற்றி வாய்ப்புள்ள சுயேச்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் இப்போதே தீவிரமாக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
2018 இல், கட்சியில் சீட் கிடைக்காமல் போட்டியிட்ட கிளர்ச்சியாளர்களால் காங்கிரஸ் 7 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் தோற்கடிக்கப்பட்டனர். காங்கிரஸால் 116 என்ற தனிப்பெரும்பான்மையை எட்ட முடியவில்லை. எனவே, காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்ததற்கு, அக்கட்சியில் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் விலகி வாக்குகளைப் பிரித்த சுயேட்சைகளும் காரணம்.
பாஜகவால் நீக்கப்பட்ட தலைவர்கள் பட்டியலில் மொரேனாவின் முன்னாள் எம்எல்ஏ ருஸ்தம் சிங், திகாம்கர் முன்னாள் எம்எல்ஏ கேகே ஸ்ரீவஸ்தவா, மாநில பாஜக முன்னாள் தலைவர் நந்தகுமார் சவுகானின் மகன் ஹர்ஷ்வர்தன் சவுகான், சித்தியின் சிட்டிங் எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னாள் எம்பி பிரேம்சந்த் குட்டு, முன்னாள் எம்எல்ஏ அந்தர் சிங் தர்பார், முன்னாள் எம்எல்ஏ யாத்வேந்திர சிங், மாநில கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் சிங் யாதவ் மற்றும் நசீர் இஸ்லாம் உள்ளிட்டோர், காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காததால் சுயேட்சைகளாக களமிறங்கியுள்ளனர். இப்படியாக காங்கிரஸிலும், பாஜகவிலும் தலா 10க்கும் மேற்பட்டோர் சுயேட்சைகளாக களமிறங்கியுள்ளதால், வெற்றி முடிவுகள் எட்டும்போது, அவர்கள் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்கான வேலைகளை இரு கட்சிகளுமே தொடங்கி உள்ளனவாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications