சிவ்ராஜ் செளகான் எனப்படும் செல்லூர் ராஜூ ஆகிய நான்....

Subscribe to Oneindia Tamil

போபால்: தமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவை போல கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் .

இந்தியாவிலுள்ள சாலைகள் எந்த லட்சணத்தில் பராமரிக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும், தென் இந்தியாவைவிட வட இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில், சாலைகளின் தரம், நம்ம ஊர் கிராமச்சாலைகளை விட மோசம்.

இப்படி ஒரு சூழ்நிலையில்தான், ம.பி. முதல்வர் சிவ்ராஜ் செளகான் குபீர் சிரிப்பை வரவழைக்கும் பேட்டியொன்றை கொடுத்து, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

பகீர் பேட்டி

பகீர் பேட்டி

மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, சிவ்ராஜ் செளகான் சமீபத்தில் அமெரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, அமெரிக்காவுக்கு போய் வந்தவர்கள் எப்படி விவரம் தெரியாத உள்ளூர்க்காரர்களுக்கு கதை அளந்துவிடுவார்களோ அப்படி ஒரு பேட்டியை கொடுத்துள்ளார், மிகப்பெரிய ஒரு மாநிலத்தின் முதல்வராக உள்ள சிவராஜ்சிங் சவுகான்.

கதைவிட்ட முதல்வர்

கதைவிட்ட முதல்வர்

"நான் வாஷிங்டன் விமான நிலையத்தில் இறங்கினேனா, அங்கிருந்து காரில் பயணித்தேனா.. அப்போ பார்க்கனுமே ரோடுகளை.. அடச்சே.. மத்திய பிரதேச ரோடுகளை விட அமெரிக்காவிலுள்ள ரோடுகள் மோசமாக இருப்பதை அப்போதுதான் பார்த்தேன்" என்று கதையளந்தார் முதல்வர். ஆனால் ஒரு விஷயத்தை பாராட்ட வேண்டும். பேட்டியளித்தபோது, அவரது மனசாட்சியே அவரை தூண்டியிருக்க வேண்டும். ஏனெனில், இதைச் சொல்லும்போது, சீரியசாக அவரால் முகத்தை வைத்துக்கொள்ள முடியவில்லை. லேசான புன்சிரிப்பு அவரது முகத்தில் எட்டிப் பார்த்தது. "நான் ஒன்னும் சும்மா சொல்லவில்லை" என்று பேட்டி முடிவில் சொல்லவும் அவர் மறக்கவில்லை.

செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ, வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகமால் தடுப்பதாக கூறி அணையில் தெர்மாக்கோல்களை வாங்கி மிதக்க விட்டார். இந்த செயல் மாதங்கள் பல கடந்தும்கூட இன்னமும் சோஷியல் மீடியாவில் கேலிச் சித்திரங்களை உலவ விட்டுக்கொண்டுள்ளது. செல்லூர் ராஜூவிற்கு சற்றும் சளைக்காமல் இப்படி ஒரு கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார் சிவராஜ்சிங் சவுகான் என்பதால்தான், அவரை ம.பி. செல்லூர் ராஜூ என நெட்டிசன்கள் கேலி செய்கிறார்கள்.

அமெரிக்காவுடன் ஒப்பிடலாமா?

அமெரிக்காவுடன் ஒப்பிடலாமா?

மத்திய பிரதேசத்திலுள்ள சாலைகள் நிலைமை படுமோசமாக உள்ளது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இதுகுறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். தலைநகர் போபால் கூட மோசமான சாலைகளை கொண்டுள்ளது. சாலை பள்ளங்களால் கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் பாஜக அரசு, முந்தைய காங்கிரஸ் ஆட்சி எப்படி இருந்தது என்பதை இன்றைய தலைமுறைக்கு காண்பிக்க இந்த சாலைகள் உதவும் என கேலியாக பதில் சொல்லி வருகிறது. ஆனால் கடந்த 12 வருடங்களாக ம.பி.யில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது.

புகழ் பெற்ற அமெரிக்க சாலை

புகழ் பெற்ற அமெரிக்க சாலை

அதேநேரம், அமெரிக்கா, சாலை நெட்வொர்க்கிற்கு உலக அளவில் புகழ் பெற்றது. இங்கு 65.8 லட்சம் கி.மீ தூர சாலை நெட்வொர்க் உள்ளது. அமெரிக்காதான் உலகின் மிக நீண்ட சாலை நெட்வொர்க் உள்ள நாடாகும். மத்திய பிரதேசத்தின் எந்த ஊர் சாலையை பார்த்து, சிவ்ராஜ் செளகானுக்கு இப்படி ஒரு நினைப்பு வந்தது என்று தெரியவில்லை என கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+