ம.பி.யில் அதிரடி-பழங்குடி இளைஞர் மீது சிறுநீர்- பாஜக கொடூரனின் ஆக்கிரமிப்பு வீடு இடித்து தரைமட்டம்!
போபால்: நாட்டையே அதிரவைக்கும் வகையில் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜகவை சேர்ந்த கொடூரன் பிரவேஷ் சுக்லா ஆக்கிரமித்து கட்டியிருந்த வீட்டை அம்மாநில பாஜக அரசு இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இம்மாநில ஆளும் பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா-வின் பிரதிநிதி அல்லது ஆதரவாளர் பிரவேஷ் சுக்லா குடிபோதையில் செய்த ஈவிரக்கமே இல்லாத கொடூரம் தேசத்தையே அதிர்ச்சியில் உறையவைத்தது.

குடிபோதையில் இந்த நிலத்தின் பூர்வகுடி இளைஞர் மீது சிறுநீர் கழிக்கும் வீடியோதான் அது.. நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியுடன் கடும் கண்டனங்களுடன் பாஜகவை சேர்ந்த பிரவேஷ் சுக்லாவின் குரூரமான இந்த வீடியோ பகிரப்பட்டு வந்தது. இது தொடர்பாக உடனடியாக பதிலளித்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அந்நபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என உறுதி அளித்தார். மேலும் எந்த ஒரு கிரிமினலுக்கும் ஜாதி, மதம், கட்சி என எதுவுமே இல்லை. ஒரு கிரிமினல், கிரிமினல் மட்டும்தான். இப்படியாக கொடுஞ்செயல் செய்த நபர் தண்டனையில் இருந்து ஒருபோதும் தப்பவே முடியாது எனவும் கூறியிருந்தார் சிவராஜ் சிங் சவுகான். இதனையடுத்து பிரவேஷ் சுக்லா இன்று அதிகாலை 2 மணி அளவில் கைது செய்யப்பட்டார்.
அதேநேரத்தில் பிரவேஷ் சுக்லா தமது பிரதிநிதி அல்ல என பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா கூறி வந்தார். ஆனால் தனது தொகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் பாஜக பிரமுகர்கள், எம்.எல்.ஏக்களுடன் அதி முக்கிய கூட்டங்களில் பிரவேஷ் சுக்லாவும் அமர்ந்திருக்கும் படங்களும் வெளியாகி பாஜகவையும் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இன்னொரு பக்கம், பிரவேஷ் சுக்லா, பாஜக உறுப்பினரே இல்லை என அடித்தும் கூறுகின்றனர்.
#WATCH | Sidhi viral video | Accused Pravesh Shukla's illegal encroachment being bulldozed by the Administration. He was arrested last night.#MadhyaPradesh pic.twitter.com/kBMUuLtrjK
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 5, 2023
இந்நிலையில் மத்திய பிரதேச மாநில அரசு அடுத்த அதிரடியாக, சிதி மாவட்டத்தில் பிரவேஷ் சுக்லா ஆக்கிரமித்து கட்டியிருந்த வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications