கணவரின் முதல் மனைவியை.. 50 முறை கத்தியாலேயே குத்திய இளம்பெண்.. ஆவேசத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்
போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு கொடூர சம்பவம் அம்மாநில மக்களை பதற செய்து வருகிறது.. இது தொடர்பாக இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. எனினும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் கொந்தளிப்புடன் உள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றம் கொடூர தண்டனையை குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கியிருந்தது.. மத்திய பிரதேச மாநிலம், ரேவா மாவட்டம் மங்காவா காவல் நிலைய எல்லைக்குட்பட்டது அட்ரைலா என்ற கிராமம்.

மாமியார் தகராறு: இங்கு வசித்து வருபவர் 24 வயதுடைய காஞ்சன் கோல்.. இவருக்கும் இவரது மாமியார் சரோஜ் கோலுக்கும் (50) குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது... இந்த தகராறு முற்றியதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 12ம் தேதியன்று, காஞ்சன் கோல், தனது மாமியாரை கத்தியால் 95 முறை குத்தி கொலை செய்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து காஞ்சன் கோலை, போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, ரேவா மாவட்டத்தின் நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில்தான் இதில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கைது விசாரணை: வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா ஜாதவ், குற்றம் சாட்டப்பட்ட காஞ்சன் கோலுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். 95 முறை மாமியாரை கத்தியால் குத்தி கொன்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்த தீர்ப்பானது பலரது கவனத்தையும் பெற்றிருத்து.
இந்நிலையில், இதே மத்தியபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.. ரிவா மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்பாபு வர்மா. இவர் 2019ம் ஆண்டு ஜெயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது ஜெயாவுக்கு 26 வயதாகிறது.. இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு மன்சி என்ற 22 வயது பெண்ணை, ராம்பாபு 2வதாக திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, 3 பேருமே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
முதல் மனைவி: இந்நிலையில், தீபாவளியன்று இரவு ஜெயாவுக்கும், மன்சிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவனின் முதல் மனைவியான ஜெயாவை, 2வது மனைவி மன்சி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதுவும் 50 முறை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் வலியால் ஜெயா அலறி துடித்ததையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்..
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மன்சியை கைது செய்து சிறையில் அடைத்து, இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. ஜெயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
அதிர்ச்சி சம்பவம்: அவருக்கு நினைவு திரும்பினால்தான், அவரிடம் வாக்குமூலம் பெற முடியும் என்கிறார்கள் போலீஸார்.. ஆனால், ஜெயாவின் நிலைமை சீரியஸாக உள்ளதாக தெரிகிறது.. தொடர்ந்து அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடிவருகிறார்கள். 22 வயது பெண், 26 வயது பெண்ணை 50 முறை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை மத்திய பிரதேசத்தில் ஏற்படுத்தி வருகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications