மெட்ராஸ் ஹைகோர்ட் சென்னை உயர் நீதிமன்றமாக விரைவில் பெயர் மாற்றம் - மத்திய அரசு முடிவு
டெல்லி: மெட்ராஸ் ஹைகோர்ட் சென்னை உயர் நீதிமன்றமாக விரைவில் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார்.
மெட்ராஸ் என்ற பெயரை நீக்கிவிட்டு சென்னை நகரத்தின் பெயரிலேயே உயர்நீதிமன்றத்தை மறுபெயரிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக மசோதா ஒன்றையும் இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மசோதா நிறைவேறிய பிறகு மெட்ராஸ் ஹைகோர்ட் என தற்போது அழைக்கபடும் உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும். இந்த மசோதா குறித்து சர்ச்சைகள் இல்லாததால் இது நிறைவேறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று மத்திய அரசு கருதுகிறது.
இந்நிலையில் மெட்ராஸ் ஹைகோர்ட் விரைவில் சென்னை உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் பெறுகிறது. இது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். இனி ஆங்கிலத்திலும் சென்னை ஹைகோர்ட் என்றே அழைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா
தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
