மதரஸாக்கள் 'கே'க்களின் கூடாரங்கள், தடை செய்க: அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக பேராசிரியர்
அலிகார்: மதரஸாக்கள் ஓரினச்சேர்க்கையாளர்களின் கூடாரங்கள் என அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக பேராசிரியர் வாசீம் ராஜா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக உள்ளவர் வாசீம் ராஜா. அவர் டிவி சேனல் ஒன்றுக்கு வாட்ஸ்ஆப்பில், மதரஸாக்கள் ஓரினச்சேர்க்கையாளர்களின் கூடாரங்களாக உள்ளன. மவ்லானாக்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள். முஸ்லீம் இளைஞர்களின் எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் எனில் நாட்டில் உள்ள மதரஸாக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை ராஜா தான் டிவி சேனலுக்கு அனுப்பினார் என்று கூறப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகளாக அந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ராஜாவோ தான் அத்தகைய தகவலை அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜா கூறுகையில்,
எனது போனை யாரோ ஹேக் செய்து அந்த தகவலை அனுப்பியுள்ளனர். சமூகத்தில் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும் என்று கூறுபவன் நான். மதரஸாக்கள் சமூகத்தில் இல்லையா? என்றார்.
இந்நிலையில் ராஜாவை பல்கலைக்கழக மாணவர்கள் சமூக வலைதளங்களில் திட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications