மேகி தடையால் தொழிலாளர்கள் பாதிப்பு.. கூலி வேலை செய்தும், டீ விற்றும் வாழ்க்கை நடத்துகிறார்கள்
டெல்லி: மேகி நூடுல்ஸ் உற்பத்தி மையம் மூடப்பட்டுள்ளதால், அதில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, ரிக்ஷா ஓட்டுவது, டீ விற்பனை செய்வது போன்ற தொழில்கள் செய்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே தயாரித்து வரும் மேகி நூடுல்ஸ் குழந்தைகளால் விரும்பி சாப்பிடப்பட்டுவந்தது. இந்நிலையில், மேகியில் அளவுக்கு அதிகமான கெடுதல் விளைவிக்கும் மூலப்பொருள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்ததை தொடர்ந்து, இந்திய அரசு அதற்கு தடை விதித்துள்ளது.

3 மாதங்கள் நீடிக்கும் தடை
சுமார் 3 மாதங்கள் முன்பு நாடு முழுவதும் மேகியின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் உத்தரஹாண்ட் மாநிலத்திலுள்ள ருத்ராபூர் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது.

3 லட்சம் கிலோ
ருத்ராபூர் நகரிலுள்ள மேகி உற்பத்தி பிரிவில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் கிலோ அளவுக்கு மேகி உற்பத்தி நடைபெற்று வந்தது. ஆனால், 3 மாதங்களாக அங்கு ஆலை மூடப்பட்டுள்து.

தொழிலாளர்கள்
ருத்ராபூர் ஆலையில் சுமார் 1100 பணியாளர்கள் வேலை பார்த்து வந்த நிலையில், மேகி தடை அவர்களை வெகுவாக பாதித்துள்ளது. பணியார்களில் பெரும்பாலானோர் ஏழைகள் என்பதால், தங்கள் தினசரி சாப்பாட்டு செலவுக்கு இந்த வேலையை நம்பிதான் இருந்துள்ளனர். தற்போது, அந்த தொழிலாளர்கள் நிலை பரிதாபமானதாக மாறியுள்ளது.

ரிக்ஷா ஓட்டுகிறார்கள்
வேலையிழந்த தொழிலாளர்களில் பலரும், ரிக்ஷா ஓட்டுவது, டீ விற்பனை செய்வது, கட்டிட வேலைக்கு செல்வது என வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். மேகி உற்பத்தி பிரிவில் வேலை பார்த்த 43 வயதான ராஜேந்திர சிங் இதுகுறித்து கூறுகையில், "வாடகைக்கு ரிக்ஷா ஓட்டும் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். மேகி மீதான தடை உரிமையாளர்களை பாதித்ததோ இல்லையோ, அங்கு வேலை பார்க்கும் என்னைப்போன்ற தொழிலாளர்களை பாதித்துவிட்டது" என்றார்.

தற்கொலை
இந்த ஆலையில் வேலை பார்த்த பலரும் ம.பி., உ.பி, பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்தான். மீண்டும் அவர்களில் பலரும் சொந்த மாநிலங்களுக்கே சென்று வேறு ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடிவருகின்றனர். லல்தா பிரசாத் என்ற ஊழியர், விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications