மோசமான அரசியல்வாதிகள் மறைந்து போக வேண்டும்.. பி.சி சர்க்கார் ஆசை

உலகம் முழுவதும் பிரபலமான ஒரு மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்காரின் மகனான பி.சி.சர்க்கார் ஜூனியர். இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பராசத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடவுள்ளார்.
இந்த நிலையில் கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேஜிக் ஷோவில் நாங்கள் பலரையும் காணாமல் போகச் செய்துள்ளோம். அதேபோல நமது நாட்டிலும் மோசமான அரசியல்வாதிகள் அனைவரும் அப்படியே காணாமல் போய் விட வேண்டும்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நரேந்திர மோடியும், மமதா பானர்ஜியும் இணைவார்கள். இதை நான் உறுதியாக நம்புகிறேன். இது நிச்சயம் நடக்கும். இருவரும் இணைந்து செயல்படுவதை நாம் பார்க்க்ததான் போகிறோம்.
பிரதமராக நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு உதவுவார். மேற்கு வங்க மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல உதவுவார்.
மாஜிக் மூலம் மக்களின் வாக்குகளைக் கவர முடியாது. மாஜிக் என்பது ஒரு மாபெரும் கலை. அது பொழுதுபோக்கு. மக்களைக் கவர வேண்டுமானால் உண்மையான சாதனைகளை நாம் நிகழ்த்த வேண்டும். உண்மையான அற்புதங்களை நிகழ்த்த வேண்டும். அதை விட்டு விட்டு மோசமான மலிவான செயல்களால் மக்களைக் கவர முடியாது.
உண்மையில் மக்கள்தான் நிஜமான அற்புதங்களை நிகழ்த்துபவர்கள் ஆவர். அவர்கள்தான் உண்மையான மாஜிக் நிபுணர்கள். அவர்கள் நினைத்தால் யாரையும் காணாமல் போகச் செய்ய முடியும்.
குஜராத் கலவரத்திற்கு மோடி காரணமல்ல என்பதை நான் திடமாக நம்புகிறேன். அவர் மீது தவறான பழி சுமத்தப்படுகிறது. கற்பனையான குற்றச்சாட்டுக்கள் இவை என்றார் அவர்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications