அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்.. வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

போர்ட் பிளேயர்: அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அந்தமான் தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்தமான் தீவுகளில் இன்று காலை 8.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Magnitude 5.6 earthquake hits Andaman and Nicobar Islands today

அந்தமான் தீவுகளில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளன.

இதன் காரணமாகவே இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடைசியாக ஜனவரி 14-ம் தேதி அந்தமான் தீவுகளில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+