Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு செக் வைத்த "இந்தியா".. தேஜஸ்வி யாதவிற்கு தான் முதல்வர் பதவியாம்! மிக முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் இந்தியா கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், இப்போது தான் அது முடிவுக்கு வந்துள்ளது. ஆர்ஜேடி தலைவரான தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்குத் தேர்தலுக்குச் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பீகாரில் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் இருக்கிறது. அங்கு என்டிஏ கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்து, பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது. ஆனால், இந்தியா கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தது. இதற்கிடையே முதற்கட்ட வாக்குப்பதிவுக்குச் சில வாரம் மட்டுமே இருக்கும் சூழலில் இப்போது தான் மோதல் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

Mahagathbandhan Names Tejashwi Yadav as Bihar CM Face for 2025 election After Weeks of Wrangling

முதல்வர் வேட்பாளர்

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், 'மகாபந்தன்' கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சீட் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின்போது கூடுதல் இடம் கேட்டு அழுத்தம் கொடுத்த விஐபி (விகாஷீல் இன்சான் கட்சி) தலைவர் முகேஷ் சஹானி, துணை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், கடைசியில் இப்போது தான் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

அசோக் கெலாட் அறிவிப்பு

இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கூறுகையில், "அனைத்து மூத்த தலைவர்களுடனும் விவாதித்த பிறகு, பீகாரில் தேஜஸ்வி யாதவ் மகாபந்தனின் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவருக்கு மிகப் பெரிய அரசியல் எதிர்காலம் உள்ளது" என்று தெரிவித்தார்.

துணை முதல்வர்

பீகாரில் கூட்டணியில் சலசலப்பு தொடர்ந்ததால் நிலைமையைச் சரி செய்ய அசோக் கெலாட் பீகார் விரைந்தார். அவர் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே கூட்டணிக்குள் ஒரு தெளிவு வந்துள்ளது. முதல்வர் வேட்பாளர் மட்டுமின்றி துணை முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பும் கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் விஐபி கட்சியைச் சேர்ந்த முகேஷ் சஹானி அங்குள்ள நிஷாத் சமூகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர். அவருக்குத் துணை முதல்வர் பதவி தரப்படும் என அறிவித்துள்ளனர்.

அதேபோல இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்போது மேலும் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவருக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கெலாட் அறிவித்தார். இது பீகார் அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. என்டிஏ கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என யாரும் அறிவிக்கப்படாத நிலையில், இந்தியா கூட்டணி முதல்வர் மற்றும் துணை முதல்வர் வேட்பாளரை அறிவித்து செக் வைத்துள்ளது.

தேஜஸ்வி யாதவ்

பீகாரைப் பொறுத்தவரை அங்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பாகத் தேஜஸ்வி கூறுகையில், "நாங்கள் மகாபந்தன் தலைவர்கள்.. ஆட்சி அமைப்பதும், முதல்வர் பதவியை அடைவது மட்டும் எங்கள் இலக்கு இல்லை.. பீகார் மக்களுக்காக உழைக்கவே விரும்புகிறோம். ஒருபுறம் ஊழல், மறுபுறம் குற்றங்கள் என இரட்டை எஞ்சினாக செயல்படும் என்டிஏ அரசின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று கூறினார்.

குழப்பம்

பீகாரில் வாக்காளர் ஆதார் யாத்திரையின் போது தேஜஸ்வி மற்றும் ராகுல் இடையே நல்லுறவு ஏற்பட்டிருந்தது. இதனால் கூட்டணி சலசலப்பு எதுவும் இருக்காது என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், வேட்புமனு தாக்கல் முடியும் கூட இந்தியா கூட்டணியில் தெளிவில்லாமல் இருந்தது. இப்போது ஆர்ஜேடி 143 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், மற்ற தொகுதிகள் இதர கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. அதேநேரம் இன்னும் 12 தொகுதிகளில் தெளிவான முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+